கையில் இந்த ரேகை இருந்தால் ஜாக்போட் தான்.. ஆயுசு முழுக்க சுக்ர திசை ஆதிக்கமா?
பொதுவாக கைரேகைகள் என கூறும் போது அது பல நூற்றாண்டுகளாக மக்களை கவர்ந்திழுக்கும் ஒரு பண்டைய நடைமுறையாகும்.
வாழ்க்கையில் நடக்கும் முக்கிய விடயங்களை இந்த ரேகைகளை வைத்து தான் கண்டுபிடிப்பார்கள்.
இதில் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் வாழ்க்கையில் ஏற்ற தாழ்வை ஏற்படுத்தும்.
கைரேகை என்பது ஜோதிடம் என கூறுவதை விட தனிநபரின் வாழ்க்கைப் பயணத்தில் மதிக்கும் ஒரு கருவியாக இருக்கின்றது.
அந்த வகையில், வெற்றியுடன் தொடர்புடைய கைரேகைகளும் அதன் அறிகுறிகளையும் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
ரேகைகளின் அறிகுறிகள்
1. சூரிய ரேகை
சூரிய ரேகை என்று கூறும் போது அது அப்பல்லோ கோடு, படைப்பாற்றல், புகழ் மற்றும் வெற்றியின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகின்றது. ஒருவரின் தலைமைத்துவம், ஆளுமை கவர்ச்சி என பல விடயங்களை இந்த ரேகை குறிக்கின்றது.
2. விதி ரேகை
விதி ரேகை என்பது ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான ரேகைகளில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த ரேகை ஒருவரின் வாழ்க்கைப் பாதை மற்றும் சாதனைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்குகிறது.
வலுவான நோக்கங்களையும் இலட்சியங்களையும் அடைவதற்கு இது ஒரு முக்கிய உந்தலாகும்.
3. குரு மேடு
கைரேகைகளுக்கு ஏற்றால் போல் கிரகங்களில் மாற்றம் ஏற்படும். உள்ளங்கையில் உயர்வாக இருக்கும் ரேகை மேடு எனவும் ஆள்காட்டி விரலின் அடிப்பகுதியில் அமைந்துள்ள குரு மேடு எனவும் அழைக்கப்படுகின்றது.
இந்த ரேகை லட்சியம், தலைமைத்துவம் மற்றும் தனிப்பட்ட சக்தி ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |