உங்கள் கைரேகை இப்படி இருக்கா? ஆணவத்தில ஆடாதிங்க... திருமண வாழ்க்கை தலைகீழா மாறப் போகுது?
திருமண வாழ்க்கை தொடர்பான கைரேகை ஜோதிடம், உள்ளங்கையில் எந்த வகையான கோடுகள் பிரச்சனைகளை உருவாக்கக் கூடியது என்றும் அதற்கான எளிய பரிகாரங்கள் என்ன என்பதைப் பார்ப்போம்.
ஒருவரின் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும், எப்போது திருமணமாகும் எப்படிப்பட்ட துணை அமைவார் ஏன் தம்பதியிடையே கருத்தியல் ரீதியான வேறுபாடு வாழ்க்கைப் பிரச்னைகளுக்கு காரணமாக அமைகின்றன போன்ற விஷயங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
பெண்ணின் கை கடினமாக இருத்தல்
விதிவிலக்காக சில பெண்களுக்கு கடினமான உள்ளங்கையாக அமைந்து, ஆணின் கை மென்மையாக இருந்தால் திருமண வாழ்க்கையில் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும். அதுமட்டுமல்லாமல் ஒருவரின் திருமண ரேகையில் ஏதேனும் ஒரு ரேகை வெட்டுவது போல இருந்தால் திருமண வாழ்க்கையில் சில தடைகள் ஏற்படும்.
இதய ரேகை
ஒரு பெண்ணின் இதய ரேகை வேறு ஏதேனும் தடித்த ரேகையை வெட்டினால் அல்லது இதய ரேகை தலை ரேகைக்கு குறுக்காக சென்றால், அவர் தன் கணவருடன் சிறிய விஷயங்களுக்கு கூட மனஸ்தாபம் கொள்வார். சிறிய புறக்கணிப்பைக் கூட பொறுத்துக் கொள்ளமாட்டார். இதனால் இவர்களின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையும்.
தெளிவில்லாத ரேகை
தெளிவில்லாத ரேகை கை ரேகை பளிச்சென்று இருப்பது நற்பலனைத் தரும். சிலரின் தலை ரேகைகூட தெளிவில்லாமல் அலை, அலையாக இருந்தால் அந்த நபரின் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி குறைவாக இருக்கும்.
சுக்கிர மேட்டில் மச்சம்
ஒருவரது கைகள் கடினமாகவோ, விரல்கள் தடித்ததாகவோ அல்லது வளைந்ததாகவோ இருந்தால், அவரது முழு வாழ்க்கையும், திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட வெறுப்பினால் பிரச்னைக்கு உள்ளாகும்.
அதே சமயம், சுக்கிர மேட்டில் மச்சம் இருந்தும், சுக்கிரன் மேடு பெரிதாக இருந்தால் இல்லறத்தின் மகிழ்ச்சி தடைப்படுகிறது.