கற்றாழையில் இவ்வளவு தீமையும் இருக்கா! யாரெல்லாம் பயன்படுத்தக்கூடான்னு தெரியுமா?
பொதுவாகவே கற்றாழை குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகள் தொடங்கி கூந்தல் வளர்ச்சி மற்றும் பராமரிப்பு மற்றும் சரும பராமரிப்பிலும் கற்றாழை முக்கிய இடம் வகிக்கின்றது.
கற்றாழை லில்லியேசி தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஆப்பிரிக்காவைத் தாயகமாகக் கொண்டது. மேலும் கிரேக்கம், பார்படோ தீவுகள், சீனா, இத்தாலி, வெனிசுலா, தென்னாப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இயற்கையாக வளர்கின்றது.
கற்றாழையால் பல நன்மைகள் இருந்தாலும், சில தீமைகளும் உள்ளன. ஆனால் அது குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
அந்தவகையில் கற்றாழை யாருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்லாம்.
குறிப்பாக கற்றாழைச் சாற்றை அதிகமாக உட்கொள்வது அல்லது தவறாகப் பயன்படுத்துவது சிலருக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம்.
கற்றாழையின் தீமைகள் என்னென்ன?
தோல் எரிச்சல்: சிலருக்கு கற்றாழை ஜெல் அல்லது சாற்றைப் பயன்படுத்தும்போது சருமத்தில் எரிச்சல், அரிப்பு அல்லது சிவத்தல் ஏற்படலாம். ஒவ்வாமை இருப்பவர்கள் கற்றாழையை தவிர்ப்பது நல்லது.
கற்றாழை சாற்றை அதிக அளவில் உட்கொள்வது வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.எனவே வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பவர்கள் கற்றாழையை வாய் வழியாக எடுத்துக்கொள்வதில் அவதானமாக இருக்க வேண்டும்.
கற்றாழை சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அரிப்பு, தடிப்பு, அல்லது சுவாசப் பிரச்சனைகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம். இவ்வாறான பிரச்சினையிருப்பவர்கள் கற்றாழையை பயன்படுத்துவதை தவிர்ப்பது சிறப்பு.
சந்தையில் கிடைக்கும் கற்றாழை சாற்றில் சில நேரங்களில் ரசாயனங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் சேர்க்கப்படுகின்றன. இவை சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அதிக உணர்திறன் கொண்ட சருமம் உள்ளவர்கள் கற்றாழையை பயன்படுத்துவதில் மிகுந்த அவதானம் தேவை.
கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கற்றாழையை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கருச்சிதைவு அல்லது பிறப்பு குறைபாடுகளை ஏற்படுத்தலாம்.
வேறு ஏதேனும் நோய்களுக்கு மருந்துகளை உட்கொண்டு வருவது வழகமாக இருந்தால், கற்றாழையை பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகுவது நல்லது.ஏனெனில், கற்றாழை சில மருந்துகளுடன் வினைபுரியலாம்.
நீங்கள் ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது கற்றாழையை உட்கொள்ளும் போது ஏதேனும் அறிகுறிகளை உணர்ந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. எனவே ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த கற்றாழையில் இவ்வளவு தீமைகளும் இருக்கின்றது என்பதை அறிந்து அவதானமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
