இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கா? அப்போ இந்த ஆபத்துக்கள் உங்களுக்கு தான்
தற்போது இரவு நேர பணிகள் அதிகமாகி விட்டது.
காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புபவர்களை விட இரவில் வேலைக்கு சென்று அதிகாலையில் வீடு திரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டது.
இதனால் அவர்களின் வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். அது அவர்களின் உடல் ஆரோக்கியம் உட்பட முழு வாழ்க்கையையும் பாதிக்கும். சிலர் மாலை கொஞ்சம் நேரமாகி வீட்டிற்கு வருவார்கள்.
காலையில் கொஞ்சம் அதிகமாக தூங்குவதற்காக இரவிலேயே தலைக்கு குளிக்கும் பழக்கத்தினை கையாண்டு வருகிறார்கள். இந்த பழக்கம் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதுவும் குறிப்பாக இரவில் தலைக்கு குளிக்கும் பெண்களுக்கு நோய்கள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது.
அந்த வகையில், இரவில் தலைக்கு குளிக்கும் பெண்கள் என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதை பதிவில் பார்க்கலாம்.
இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் இருக்கா?
1. இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் கொண்ட பெண்களின் தலைமுடி பாதிப்படையும்.
2. இரவில் தலைக்கு குளிக்கும் பெண்களின் தலைமுடி ஈரமாக இருக்கும். அப்படியே நாம் தூங்கும் பொழுது உடல்நல பாதிப்புக்கள் அதிகமாக வர வாய்ப்பு உள்ளது. இதனை வழக்கப்படுத்திக் கொள்ளாமல் இருப்பது உடல்நல பாதிப்புக்களை குறைக்கும்.
3. தலைக்கு குளித்த பின்னர், ஈரத்துடன் இருக்கும் தலைமுடியை சீப்பு பயன்படுத்தி சீவக் கூடாது. ஏனெனின் ஈரமாக இருக்கும் தலைமுடியை சீவும் பொழுது தலைமுடி உடைவதற்கு வாய்ப்பு உள்ளது.
4. ஈரமாகவே கொஞ்சம் தலை இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் பூஞ்சை வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் அதிகமான தலைமுடி உதிர்வு, பொடுகு தொல்லை ஆகியன இருக்க வாய்ப்பு உள்ளது.
5. இரவில் தலைக்கு குளிக்கும் பழக்கம் கொண்டவர்களின் தலைமுடி காலையில் எழுந்து பார்க்கும் பொழுது சிக்கலடைந்து காணப்படும். அதனை சரிப்படுத்துவதற்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். அதற்கு காலையில் எழுந்து தலைக்கு குளிக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |