தினமும் குளிக்காவிட்டால் என்ன நடக்கும்? குளிக்காதவர்கள் தெரிஞ்சிக்கோங்க!
பொதுவாக உடல் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
சுகாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தினமும் காலையில் குளிப்பது அவசியம்.
இது குளிப்பதற்கு மட்டுமல்ல நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கும்.
சிலர் சோம்பேறித்தனமாக காலையில் குளிக்காமல் இன்னும் சிலர் இரண்டு நாட்களுக்கு மேல் குளிக்காமல் இருப்பார்கள். இது உடலில் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அந்த வகையில் தினசரி குளிக்காவிட்டால் என்ன நடக்கும்? என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
தினசரி குளிக்காவிட்டால் இவ்வளவு பிரச்சினைகளா?
1. குளிக்காவிட்டால் உடல் துர்நாற்றம் முதல் பூஞ்சை தொற்று வரை இலவசமாக உடம்பில் குடிகொள்ள ஆரம்பித்து விடும்.
2. முறையாக சுத்தம் செய்யாத பொழுது தோலில் இருக்கும் எண்ணெய் தன்மை மற்றும் வியர்வைகள் வெளியேறாமல் வேறு வகையான சரும நோய்களை ஏற்படுத்தும்.
3. தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்காவிட்டால் ஒரு வகையான அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
4. சொறி, சிரங்கு, அரிப்பு ஆகிய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
5. சமூக கேலிக்கு ஆளாக வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
6. துர்நாற்றம் மற்றும் அசௌகரியம் ஆகிய காரணங்களால் மன அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |