நீரிழிவு நோயாளிகள் அளவிற்கு அதிகமாக பாராசிட்டமால் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
பாராசிட்டமால் மாத்திரையின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது.
பாராசிட்டமால் ஒரு பிரபலமான வலி நிவாரணி என்பதோடு, காய்ச்சல் - உடல் வலி ஏற்படும் போதும் எடுத்துக் கொள்ள மருத்துவர்களால் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.
பாராசிட்டமாலை மிக பாதுகாப்பான மருந்தாக கருதும் போக்கு மக்களிடம் அதிகம் காணப்படும் நிலையில், அதன் பக்க விளைவுகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.
வாந்தி, மயக்கம், அதிக காய்ச்சல், வாய் புண், அல்சர், குடல் பாதிப்பு, ரத்த சோகை, பசியின்மை, உதடுகள், வெந்து போகுதல்
இத்தகைய கொடுமையான விளைவுகளால் பாதிக்கப்படுவீர்கள்.
குறிப்பாக உடலில் ஏதேனும் அலர்ஜி, அரிப்புகள் ஏற்பட்டிருந்தால் உபோயோகிக்க கூடாது.
அத்துடன் கிட்னி மற்றும் கல்லீரல் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்கள் பாராசிட்டமாலை பயன்படுத்த கூடாது.
நீரிழிவு நோயாளிகள் இதனை மருத்துவரின் ஆலோசனையோடு உண்பது மிக நல்லது. இல்லை என்றால் அவர்களின் நிலைமை மோசமாகிவிடும்.
மருத்துவர் ஆலோசனையின் படி அளவோடு எடுத்துக் கொண்டால் பாதிப்பு இருக்காது.
ஆனால், அதனை மிக அதிக அளவில் தினமும் பயன்படுத்துவது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று முன்னதாக நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் வெளியாகியுள்ளது.
இதனை தினசரி எடுத்துக் கொள்வதால், இரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
எனவே, பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளும் நோயாளிகளுக்கு அதன் அபாயங்கள் குறித்து மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவிக்க வேண்டியது அவசியம்.
அதிர்ச்சி...அதிகமாக நிலக்கடலை எடுத்துக்கொண்டால் மாரடைப்பு ஏற்படும்!