ஆட்டிறைச்சி பிரியரா நீங்க? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்
பொதுவாகவே அசைவ உணவை விரும்பாதவர்கள் யாருமில்லை. அப்படி அசைவ பிரியர்களின் பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
சில பேர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.ஆனால் ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக் கூடாது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
ஆட்டிறைச்சி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள் குறித்தும் வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
இவ்வாறு ஆட்டிறைச்சியை அதிகமாக எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதக விளைவுகள்
ஆட்டிறைச்சியை இதிகமாக சாப்பிடுவதால் உடலில் வீக்கத்தை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், புற்றுநோய் போன்ற தீராத நோய்கள் வருவதோடு, நாள்பட்ட உடல்நலக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகமானக காணப்படுகின்றது.
ஆட்டிறைச்சியை அதிகமாக உட்கொள்வதால் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகிறது. இது படிப்படியாக இதய நோய்க்கு வழிவகுக்கிறது. உடல் எடை அதிகரிப்பிலும் ஆட்டிறைச்சி தாக்கம் செலுத்துகின்றது.
ஆனால், வாரம் ஒருமுறை மட்டுமே ஆட்டிறைச்சி சாப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.மேலும், முடிந்தவரை குறைந்த எண்ணெயில் சமைப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |