செய்தித் தாளில் சுற்றப்பட்ட உணவுகளை இனி சாப்பிடாதீர்கள்... உயிருக்கே ஆபத்தாக மாறும்
பொதுவாக சில உணவு விரும்பிகள் பார்க்கும் இடங்களில் எல்லாம் விற்கும் உணவுகளை சுவைத்து பார்க்க வேண்டும் என்று ஆசையில் அதிகம் வாங்கி சாப்பிடுவார்கள்.
அவ்வாறு சாப்பிடும் போது வறுத்த அல்லது பொறித்த தின்பண்டங்கள் செய்தித் தாள் அல்லது காகிதத்தில் சுத்தி கொடுப்பார்கள். ஆனால் இவ்வாறு சாப்பிடுவது உடலுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?
செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை, எதிர்மறையான ஆரோக்கிய விளைவுகளைக் கொண்ட பல்வேறு உயிரியக்கப் பொருட்களைக் கொண்டுள்ளது, இது உணவை மாசுபடுத்தும் மற்றும் உட்கொள்ளும் போது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் சொல்லப்படுகிறது.
காகிதத்தில் சுற்றப்பட்ட உணவுகள்
செய்தித்தாள் மையில் ஐசோப்ரோபைல் பித்தலேட், டீன் ஐசோப்ரோபைலேட் போன்ற பல ஆபத்தான இரசாயன பொருட்கள் உள்ளன. அதனால் சூடான உணவை செய்தித்தாளில் வைக்கும்போது, இந்த மை உணவில் ஒட்டி உடலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் இந்த இரசாயனங்கள் புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்திறது.
செய்தித்தாளில் சுற்றப்பட்ட உணவை சாப்பிடுவதால் பல செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.
செய்தித்தாள் மை மற்றும் பிற இரசாயனங்கள் வயிற்றுக்குள் நுழைந்து செரிமான செயல்முறையை கெடுக்கும். இதனால் வயிற்று எரிச்சல், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஐசோபிரைல் ஆல்கஹால், பாலிஎதிலீன் கிளைகோல், டைதிலீன் கிளைகோல் போன்ற இரசாயனங்கள் பொதுவாக செய்தித்தாள் மையில் பயன்படுத்தப்படுகின்றன.
செய்தித்தாள் மையில் இருக்கும் நச்சுப் பொருட்கள் உணவில் கலந்து உடலுக்குள் நுழைந்து ஹார்மோன்களை சீர்குலைக்கும். இதன் காரணமாக, தைராய்டு, இன்சுலின், ஈஸ்ட்ரோஜன் போன்ற உடலின் பல்வேறு ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |