அதிகமா வெங்காயம் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி இந்த பிழையை செய்யாதீர்கள்
வெங்காயம் ஆரோக்கியமான ஒரு உணவு பொருள் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்துமே இல்லை.
ஆனால் இதனை அதிகம் சாப்பிடும் போது பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது மறுக்க முடியாத உண்மை.
வெங்காயத்தால் ஏற்படும் ஒவ்வாமை அதனை சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின்பே தெரிய வரும்.
அதிகம் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்து
அதிகமாக வெங்காயம் சாப்பிட்டால் இரைப்பை அமிலத்தைத் தூண்டி அமில ரிஃப்ளக்ஸ், அசிடிட்டி, வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
வெங்காயத்தை நறுக்கும் போது அதிலுள்ள சல்பானிக் அமிலமானது காற்றில் கலந்து ஆவியாக மாறுகிறது. இது கண்ணீர் சுரப்பிகளில் எரிச்சலை ஏற்படுத்தி கண்ணீரை வரவழைக்கிறது.
அதிக வெங்காயம் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு மற்றும் மலச்சிக்கலின் போது குடலில் வலியை உண்டாக்கும்.
செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தசைப்பிடிப்பு, வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
வெங்காயம் அதிகமாக சாப்பிடும் போதும், பச்சையாக சாப்பிடும்போதும் வாய் துர்நாற்றம் உண்டாகும்.
முக்கிய குறிப்பு
வெங்காயத்தினை அதற்காக அப்படியே ஒதுக்கி விடாதீர்கள். அளவு எனபது மிகவும் அவசியம். எனவே அளவாக சாப்பிட்டு வெங்காயத்தின் பலன்களை பெற்று கொள்ளுங்கள்.