இந்த உணவுகளை மிச்சம் வைத்து சாப்பிடாதீங்க... உணவே விஷமாக மாறும்
பொதுவாகவே வீட்டில் மதியம் சமைத்த சாப்பாடுகளை மிச்சம் வைத்து அடுத்த நாள் வரைக்கும் வைத்து சாப்பிடுவோம். அதிலும் வேலைக்கு செல்பவர் காலையில் சமைத்த சாப்பாட்டை அன்றைய தினம் முழுக்க வைத்து சாப்பிடுவார்கள்.
ஆனால் இவ்வாறு சாப்பிடும் போது அது பின்னாளில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. அவ்வாறு மிச்சம் வைத்து சாப்பிட கூடாத சில உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிச்சம் வைத்து சாப்பிட கூடாதவை
மிச்சமான பால், தயிர் சேர்த்து தயாரிக்கும் உணவுகள் விரைவில் பழுதாகிவிடும் அதனால் அவற்றை மிச்சம் வைத்து சாப்பிடும் போது உணவு விஷமாக மாறும்.
காய்கறிகள் மற்றும் பழங்களை சில நாட்களில் பழுதாகிவிடும் அதனால் அவற்றை உரிய நேரத்தில் முடித்து விட வேண்டும்.
சமைத்த சாதத்தில் அதிகளவில் பாக்டீரியாக்கள் இருக்கும் அதனால் அவற்றை சூடு செய்து சாப்பிடும் போது நஞ்சாக மாறும்.
சமைத்த சிக்கன் மற்றும் கறி என்பவற்றை மிச்சம் வைத்து சாப்பிட்டால் அவை தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை உருவாக்கும் இந்த பாக்டீரியாக்கள் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
சூப் போன்ற உணவுகளை சமைத்த சிறிது நேரத்திலே ஃபிரிட்ஜில் வைத்துவிடவேண்டும் இல்லையென்றால் அவை கெட்டுவிடும்.
மிச்சம் வைத்த முட்டைகளில் பாக்டீரியாக்கள் உருவாகிவிடும் அதனால் அவற்றை முறையாக சமைத்து பாதுகாக்க வேண்டும்.
கடல் உணவுகள் மிச்சம் வைத்து சாப்பிட்டால் அவை உடல் உபாதைகளை ஏற்படுத்தும் அதுபோல கீரை மற்றும் சாலட்டுகள் மிச்சம் வைத்தால் அதில் மயோனைஸ் சேர்த்து செய்யப்படுவதால் விரைவில் கெட்டு விடும் அதனால் அவற்றையும் மிச்சம் வைக்காமல் சாப்பிடவேண்டும்.
வறுத்த சிப்ஸ், ஃபிரெஞ்ச் ஃப்ரைஸ் போன்றவை சூடாக்காமல் சாப்பிட்டால் அதில் பாக்டீரியாக்கள் வளரும் அதனால் தான் அதன் மொறுமொறுப்பு தன்மை இல்லாமல் போகும்.
உருளைக்கிழங்கை முறையாக பாதுகாக்க வில்லையென்றால் அவற்றில் பாக்டீரியா சென்று விஷமாகவும் மாறும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |