தயிர் விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்... ஆனால் இப்படியெல்லாம் சாப்பிடவே கூடாது
தயிரானது உடலுக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை கொடுக்கவல்லது. தயிர் சாப்பிடுவதானால் வெயில் காலங்களில் உணவு செரிமானத்தை சீராக்கும், மேலும் உடல் சூட்டைத் தவிர்த்து உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.
தினமும் உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் இதய நோய் பாதிப்புகள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கலாம் ஆனால் தயிரை சாப்பிடுவதற்கு ஒரு முறை இருக்கிறது அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தயிரை எப்படி சாப்பிட வேண்டும்
தயிரை சூடான சாதத்தில் தாளித்து உப்பு கலத்து சாப்பிடவே கூடாது
தயிர் குளிர்ச்சியாக இருப்பதால் இரவில் சாப்பிட்டால் மூச்சிரைப்பு ஏற்படும் அதனால் இரவில் தயிர் சாப்பிடக் கூடாது.
நன்றாக புளித்த தயிரை பித்த வாயு, வயிறு கோளாறு, ரத்தக் கொதிப்பு இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது
இரவில் தொடர்ந்து தயிர் சாப்பிட்டால் ரத்தக் கொதிப்பு, ரத்த சோகை, தோல் நோய் என்பன ஏற்படும்.
தயிருடன் கடலை மா சேர்த்து பூசி வந்தால் முகம் பொலிவாக மாறும்.
தயிரை மண் சட்டியில் உறைய வைத்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது
உறைந்த தயிரின் காணப்படும் தெளிந்த நீரை வெறும் வயிற்றில் குடித்தால் தொண்டை எரிச்சல், குமட்டல், உடற்சூடு, களைப்பு, தலைச்சளி நீங்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |