யாரெல்லாம் மஞ்சள் பாலை தொட்டு கூட பார்க்க கூடாது தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக பலர் மருத்துவ நலனுக்காக பாலில் மஞ்சள் கலந்து குடிப்பார்கள்.
குளிர்க்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் உடல் சூட்டை தணிந்து நோய் வரவிடாமல் தடுக்கப்படுகின்றது.
அத்துடன் மஞ்சள் பால் குடிப்பவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும்.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிகமாக இருக்கின்றது.
இது தொற்றுகளுக்கு எதிராக நம்மை போராட வைக்கின்றது. இவ்வளவு நன்மைகள் இருந்தாலும் மஞ்சளை பாலை சிலர் தவிர்ப்பது நல்லது என கூறப்படுகின்றது.
அந்த வகையில் பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்னென்ன என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் பாலின் பக்க விளைவுகள்
1. கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு மஞ்சள் பால் குடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இவர்கள் பால் குடிப்பதால் செரிமான அமைப்பு பலவீனமடைந்து வயிறு வீங்குவதற்கு வாய்ப்பு இருக்கின்றது.
2. தினமும் மஞ்சள் கலந்த பால் குடிக்கும் பொழுது உடலில் இரும்புச்சத்தை உறிஞ்சும் திறன் குறைகிறது. இதனை அடிப்படையாக வைத்து ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கின்றது.
3. பொதுவாக மஞ்சளில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது அளவிற்கு அதிகமாக எடுத்து கொள்ளும் போது குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கை ஏற்படும்.
4. கர்ப்ப காலத்தில் அதிகமாக மஞ்சள் பால் குடிப்பது தவிர்ப்பது நல்லது. மஞ்சள் கலந்த பால் குடிக்கும் போது உடலில் சூடு அதிகரிக்கும் இது கர்ப்பிணி பெண்களுக்கு ரத்தம் போக்கு அபாயத்தை அதிகரிக்கும்.
5. அளவிற்கு அதிகமாக மஞ்சள் பால் அருந்துவதால் சரும வெடிப்பு, தோல் எரிச்சல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.
முக்கிய குறிப்பு
பக்க விளைவுகள் அதிகமாகும் பொழுது உரிய மருத்துவரை நாடுவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |