பிளாக் காபி பிரியர்கள் “இத” கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க
சிலர் கருப்பு தேநீரை விட கருப்பு காபியை தான் அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.
இருப்பினும், அதிகப்படியான கருப்பு காபி சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
அளவு அதிகமான கருப்பு காபியை தவிர்ப்பது நல்லது. ஏனெனின் செரிமானத்தில் சில கோளாறுகளை ஏற்படுத்தும்.
அப்படியாயின் பிளாக் காபி குடிப்பவர்களுக்கு என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பிளாக் காபி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள்
1. காபியில் உள்ள காஃபின் இரத்த அழுத்தத்தை தற்காலிகமாக அதிகரிக்கும். இதனால் காபி குடிப்பவர்கள் அடிக்கடி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே ரத்த அழுத்தம் பிரச்சினையுள்ளவர்கள் ஜாக்கிரதையாக நடந்து கொள்வது அவசியம்.
2. கருப்பு காபியை தொடர்ந்து குடித்து வந்தால் அது தூக்கமின்மையை ஏற்படுத்தும். இது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
3. தொடர்ந்து காபி குடிக்கும் ஒருவருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். எனவே அடிக்கடி பிளாக் காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது.
4. அதிகப்படியான பிளாக் காபி குடிப்பவர்களுக்கு எலும்பு ஆரோக்கியத்தில் பாதிப்பு எற்படலாம். எனவே எதையும் அளவுடன் எடுத்து கொள்வது சிறந்தது.
5. பிளாக் காபியில் உள்ள காஃபின் உங்களின் மனநிலையில் சில மாற்றங்களை ஏற்படும். உதாரணமாக நீங்கள் கவலையாக இருக்கிறீர்கள் என்று காபி குடித்தால் உங்களின் கவலை அதிகமாக வாய்ப்பு உள்ளது.
6. உடலுக்கு ஒரு நாளைக்கு 200-400 மில்லிகிராம் காஃபின் தேவை. அதிகப்படியான காஃபின் எடுத்து கொள்ளும் பொழுது அது வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |