கொட்டைப்பாக்கு சாப்பிட்டால் தீமைகளே அதிகமாம்! இனி முழுசா தெரிஞ்சிக்கோங்க
பொதுவாக மதியம் சாப்பாட்டை முடித்த பின்னர் தமிழர்கள் பண்பாட்டின் படி வெற்றிலையுடன் சேர்த்து கொட்டைப்பாக்கு சாப்பிடுவார்கள்.
ஆனால் இந்தியன் ஜெர்னல் ஆப் மெடிக்கல் அண்ட் பீடியாட்ரிக்ஸ் ஆன்காலஜி டிரஸ்டட் சோர்ஸில் ஆய்வுகளின் மூலம் இதில் தீமைகள் அதிகம் என தெரிவித்துள்ளது.
அந்த வகையில் கொட்டைபாக்கில் இருக்கும் விளைவுகள் குறித்து தெரிந்து கொள்வோம்.
கொட்டைபாக்கு உடலில் செய்யும் ஆபத்தான விளைவுகள்

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதை போல, கொட்டைபாக்கை அதிகமாக பயன்படுத்தும் போது வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்றுநோயை ஏற்படுத்தலாம்.
வாயில் மெண்டு வைத்து கொள்ளும் போது பல்கள் மற்றும் ஈறுகளில் எரிச்சலை உண்டு பண்ணும்.
பற்களில் சிலருக்கு பிளாக் படிந்திருக்கும். இதற்கு முக்கிய காரணம் இந்த பாக்கு பாவனை தான்.
வாயில் பாக்கை வைத்து கொண்டிருப்பதால் பற்களில் அரிப்பு ஏற்பட்டு காலப்போக்கில் பற் சொத்தையும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றது.
கொட்டைபாக்குகளை தொட்டு கூட பார்க்கக்கூடாதவர்கள்

- வயிற்றில் குழந்தையை தாங்கும் கர்ப்பிணிமார்கள்
- குழந்தை பிறந்து சுமார் 1 வருடம் கூட தாண்டாத பாலூட்டும் தாய்மார்கள்
- ஆஸ்துமா நோயாளிகள்
- இதய பிரச்சினையுள்ளவர்கள்
- இரைப்பை குடல் அடைப்பு உள்ளவர்கள்
- வயிற்றுப்புண்கள் உள்ளவர்கள்
- சிறுநீர் பாதை அடைப்பு
- வலிப்பு நோயாளிகள்
