கர்ப்பிணி பெண்களுக்கு தண்ணீர் பழம் சிறந்ததா? பலரும் அறியாத உண்மை
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு சத்தான உணவுகள் அவசியம் தேவைப்படுகின்றது. ஆம் குழந்தையின் வளர்ச்சிக்கு தாய் உண்ணும் உணவு தான் மிக மிக முக்கியமாக இருக்கின்றது. ஆதலால் உட்டச்சத்து அதிகம் கொண்ட உணவினை எடுத்துக் கொள்ளுதல் அவசியம்.
இதில் தண்ணீர் பழம் என்று கூறப்படும் தர்பூசணிகள் கோடைகாலத்தில் அதிகமாகவே கிடைக்கும். இதனை கர்ப்பிணி பெண்கள் சாப்பிடுவது சிறந்ததா? என்று இப்பதிவில் காணலாம்.
தர்பூசணியில் உள்ள சத்துக்கள்
தர்பூசணியில் அத்தியாவசிய சத்துக்களான கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளன. இப்பழத்தில் 91 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால், உடம்பில் நீரேற்றத்தை பராமரிக்க உதவியாக இருக்கின்றது.
தர்பூசணியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை நிறைந்துள்ளது.
தர்பூசணியின் பயன்கள்
கர்ப்ப காலத்தில் நெஞ்செரிச்சல், அசிடிட்டி பிரச்சினை அதிகமாக ஏற்படும் நிலையில், தர்பூசணி சாப்பிட்டால் நெஞ்செரிச்சலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
தொற்று மற்றும் பிற நோய்களை எதிர்த்து போராடும் தர்பூசணியில் இருக்கும் மெக்னீசியம் தசைகளை தளர்த்துவதற்கு உதவி செய்கின்றது.
இதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் குறைப்பிரசவம் உட்பட கர்ப்பம் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகின்றன.
இந்த காலத்தில் ப்ரீக்ளாம்ப்சியா அபாயத்தை பெருமளவு குறைப்பதுடன், குமட்டலைத் தவிர்க்கவும் தர்பூசணி உதவுகிறது.