போதியளவு தண்ணீர் குடிக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? விளைவுளை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே மனிதன் உயிர் வாழ்வதற்கு தண்ணீர் இன்றியமையாதது. உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தலைசுற்றல், படபடப்பு ஏற்படும். உடலில் நீர்ச்சத்து சரியாக இருந்தால், ரத்த ஓட்டம் சரியாக இருக்கும்.
ரத்த ஓட்டம் சரியாக இருந்தால், சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக இருக்கும். நமது உடலுக்கு தினந்தோறும் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதக விளைவுகள்
போதியளவு தண்ணீர் குறைந்த அளவு நீரைக் குடிப்பவர்களுக்கு, சிறுநீர் பாதையில் கற்கள் உண்டாகும் வாய்ப்பு அதிகம்.
சிறுநீரக பாதையில் கற்கள் உண்டாகி அறுவை சிகிச்சையின் மூலம் அதை அகற்றிவிட்டாலும் கூட, மீண்டும் சிறுநீரகப் பாதையில் கற்கள் உண்டாகாமல் தடுக்க நாள்தோறும் 2 முதல் 3 லிட்டர் சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.
அப்படி என்றால் அதற்கு இரண்டு பங்கு நீரை அவர்கள் குடிக்க வேண்டும். அதிக தண்ணீர் குடிக்காவிட்டால், மூலப்பொருட்களின் அடர்த்தி காரணமாக அடர்த்தியான சிறுநீர் வரும். மேலும், உடல்நலனை பாதிக்கும்.
மனித மூளையில் தாகம் குறித்த உணர்வை தூண்டும் மையம் உள்ளது. இதன் தூண்டுதலின் காரணமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும் என்னும் உணர்வு நமக்குத் தோன்றுகிறது. 3 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கும் 70 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் மூளையில் தாக மையத்தின் தூண்டல் இருக்காது.
அதனால் இந்த வயதில் இருப்பவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு தோன்றாது. அவர்களுடைய தாகத்தை அறிந்து நீரை அளிக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் அவர்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படும்.
ரத்த அழுத்தமும் குறையும். பெண்கள் கருவுற்றிருக்கும் போது 2½ லிட்டர், தாய்பால் கொடுக்கும் போது 3 லிட்டர் குறைந்த பட்சம் நீர் அருந்துமாறு மருத்துவர்கள் அறிவுறித்தப்படுகின்றனர்.
உடலில் நீரின் அளவு குறையும் போது இரத்த அழுத்தம் குறைந்து, அடிக்கடி மயக்கம் அல்லது தலைச்சுற்றலை போன்ற பாதிப்புக்கள் ஏற்படும்.
குறிப்பாக திடீரென உட்கார்ந்து எழும் போது அல்லது உட்காரும் போது இந்த மாதிரியான உணர்வுகள் ஏற்படும். இது உடலில் போதியளவு நீர் இல்லை என்பதையே உணர்த்துகின்றது.
போதியளவு தண்ணீர் குடிக்காவிடில் மலச்சிக்கல் முதல் உடல் சோர்வு வரை ஒட்டுமொத்த நோய்கள் ஏற்படுவதற்கும் இது காரணமாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |