மயோனைஸ் பிரியரா நீங்க? அப்போ இந்த ஆபத்து உறுதி
பொதுவாகவே தற்காலத்தில் ஆரோக்கியமாக உணவுகளை மாத்திரம் உண்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கடைகளில் கிடைக்கும் துரித உணவுகளை சாப்பிடுவது மிகவும் சாதாரண விடயமாகிவிட்டது.
அந்த வகையில் தற்போது மயோனைஸ் உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் சுவைக்கு பலரும் அடிமையாகி வருகின்றது.
இதனால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து பலரும் அக்கறை செலுத்துவது கிடையாது. இவ்வாறு துரித உணவுகளின் தயாரிப்பில் முக்கிய இடம் வகிக்ககும் மயோனைஸ்ஸை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய பாதக விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பாதக விளைவுகள்
அதிக கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்த ஒரு உணவுப்பொருளாக மயோனைஸ் காணப்படுகின்றது.
முட்டை, எண்ணெய், சோடியம் நிறைந்த உப்பு போன்ற பிரதான மூலப்பொருட்களை கொண்டு இது தாயாரிக்கப்படுகின்றது.
இந்த மயோனைஸ் சாண்ட்விச், சாலட் போன்ற துரித உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது.
இதில் அதிகளவில் கொழுப்பு காணப்படுவதால் உடல் எடை கட்டுக்குள் அடங்காமல் அதிகரிக்க காரணமாகின்றது.
மயோனைஸ் பெரும்பாலும் காய்கறி எண்ணெயில் தயாரிக்கப்படுகின்றது. அதில் சாச்சுரேட்டட் மற்றும் டிரான்ஸ் ஃபேட்டுகள் அதிகமாக நிறைந்துள்ளது. இது இதய கோளாறுகளை ஏற்படுத்தும்.
குறிப்பிட்ட உணவு தேர்வுகள் மற்றும் அலர்ஜி பிரச்சினை உள்ளவர்கள் மயோனைஸ் சாப்பிடும் போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் மயோனைஸில் உள்ள முட்டை காரணமாக அது ஒரு சிலருக்கு ஒவ்வாமையை தூண்டுகின்றது.
மயோனைஸ் தினசரி சாப்பிடுவதால் ரத்த குழாய்களில் கொலஸ்ரால் படிந்து மாரமைப்பை தோற்றுவிக்கும் அபாயம் காணப்படுகின்றது.
சிறுவர்களுக்கு மயோனைஸ் சாப்பிடுவதை பழக்கப்படுத்தினால் சிறுவயது உடல் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகரிக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |