வீட்டை இடிக்காமலேயே வாஸ்து தோஷத்தைச் சரிசெய்யலாம்! சித்தர்கள் கூறிய ரகசியம் என்ன?
பொதுவாகவே பணப்பிரச்சினைகள் இல்லாமல், நல்ல ஆரோக்கியத்துடன், மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்பதுதான் ஒவ்வொருவருடைய ஆசையும். ஆனால், சில வீடுகளில் எவ்வளவுதான் உழைத்தாலும் பணம் கையில் தங்குவதில்லை.
இன்னும் சில குடும்பங்களில் தொடர்ந்து உடல்நலப் பிரச்சினைகளும் மனஅமைதியின்மையும் ஏற்படுகின்றன. இதற்கெல்லாம் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகளும் ஒரு காரணமாக இருக்குமா?

வாஸ்து சரியில்லை என்றால் வீட்டை இடித்து மாற்றியமைக்க வேண்டுமா? இதற்குப் பதிலளிக்கும் வகையில், வீட்டை இடிக்காமலேயே வாஸ்து குறைபாடுகளைச் சரிசெய்ய சித்தர்கள் கூறிய சில பாரம்பரிய முறைகள் இருப்பதாக விளக்குகிறார் டாக்டர் மகா தனசேகர் ராஜா.
குறிப்பாக, செம்பைப் பயன்படுத்துவதன் சிறப்பு, வீட்டின் நான்கு மூலைகளிலும் வெற்றிலைச் செடிகளை வளர்ப்பதன் முக்கியத்துவம், வீட்டில் வளர்க்க ஏற்ற மற்றும் தவிர்க்க வேண்டிய தாவரங்கள் எனப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அத்துடன், வாழை மரத்தின் சிறப்புகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பாரம்பரிய ரகசியங்களையும் எடுத்துரைக்கிறார்.
அவரின் குறிப்புகளின் பிரகாரம், வீட்டை இடிக்காமலேயே வாஸ்து குறைபாடுகளைச் சரிசெய்ய முடியுமா? சித்தர்கள் கூறிய அந்த ரகசியங்கள் என்ன? இது தொடர்பான விரிவான விளக்கத்தை இந்தக் காணொளி வாயிலாக பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |