மகனின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சிபிராஜ்.. என்ன கூறியுள்ளார் தெரியுமா?
நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜை தெரியாதவர்கள் யாருமே இருக்க வாய்ப்பில்லை. நடிகர் சிபிராஜ் அவரது தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் இருவரும் மாஸ் காட்டி உள்ளார்கள். இவர், பல படங்களில் நடித்து இருந்தாலும் தன் தந்தையை போல் சினிமாவில் பிரபலமாகவில்லை.
மேலும், சிபிராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தீரன் என்ற மகன் உள்ளார். சிபிராஜ் மகன் தீரன் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலையை கற்றுவருகிறார். தீரன் கடந்த சில மாதங்களுக்கு புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டாபோட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.
அங்கு நடந்த போட்டிகளில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார். இதையடுத்து, தனது மகனுக்கு தீரன் என்று பெயர் வைக்க காரணத்தை கூறியுள்ளார் சிபிராஜ். நடிகர் சிபிராஜ் காரணத்தை ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ”இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனையடுத்து தற்போதைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு குட்டி சிபிராஜ் என பதிவிட்டுள்ளார்.
?. Kutty Sibi sathyaraj ? pic.twitter.com/Ndsl5628QD
— Sibiraj Ganesh (@ganesh_sibiraj) February 22, 2021