35 வது பிறந்த நாளில் இரண்டாவது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்ருதி ஹாசன்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் இன்று தனது 35வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி வருகிறார். மேலும், பிறந்தநாளை முன்னிட்டு, கருப்பு நிற ஆடை அணிந்து பலூன்களுடன் உட்கார்ந்து போஸ் கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
இந்த நிலையில், 35வது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ருதிஹாசன் தன்னுடைய இரண்டாவது காதலரை உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
டெல்லியைச் சேர்ந்த டூடுல் கலைஞர் சாந்தனு ஹசாரிகாவுடன் பொதுவெளியில் கைகோர்த்து சென்றுள்ள வீடியோ வைரல் ஆகி வருகிறது. அதனைத் தொடர்ந்து சாந்தனு ஸ்ருதிஹாசனை கட்டி அணைத்து பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில்கூட ஸ்ருதிஹாசன் மீண்டும் காதலில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.