சுக்ராதித்ய யோகம் என்றால் என்ன? இன்னும் 60 நாட்களில் 3 ராசிகளுக்கு ராஜயோகமாம்
இன்னும் இரண்டு மாதங்களில் சுக்ராதித்ய ராஜயோகத்தால் 3 ராசிகள் பெரும் ராஜயோகத்தை அனுபவிக்கப்போகின்றனராம்.
சுக்ராதித்ய ராஜயோகம்
பல ராஜயோகங்களில் சுக்ராதித்ய ராஜயோகமும் ஒன்று. இந்த ராஜ யோகம் 2025 அக்டோபர் 17 அன்று, சூரியன் துலாம் ராசியில் 13:36 மணிக்கு சஞ்சரிப்பதால் நடைபெற போகின்றது.
இதன் பின்னர் சுக்கிரன் நவம்பர் 02, 2025 அன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார்.
சுக்கிரன் காதல், திருமண வாழ்க்கை, செல்வம், ஆடம்பரம் போன்றவற்றிற்கு ஆதாரமாக உள்ளவர். எனவே இவரின் இந்த ராஜயோகத்தை எந்த ராசி அனுபவிக்கப்போகின்றது என்பதை பார்க்கலாம்.
கன்னி | உங்களுக்கு எதிர்பாராமல் பல நன்மைகள் கிடைக்கும். எப்படியாவது திடீர் ஆதாயம் உங்களுக்கு கிடைக்கும். பல்வேறு வழிகள் மூலம் நீங்கள் பணத்தை சம்பாதிப்பீர்கள். இதனால் எங்கள் வாழ்க்கைக்கு தேவையான செல்வம் உங்களிடம் கிடைக்கும்.நீங்கள் முதலீடு செய்ய நினைப்பது லாபத்தை அதிகரிக்கும் என ஜோதிடத்தில் கணிக்கப்பட்டுள்ளது. |
கடகம் | உங்களுக்கு எல்லாமே நேர்மையான பலனை கொடுக்கும். உங்கள் செல்வம் செழிப்புடன் வளரும். இதனால் நீங்கள் வாகனங்கள் மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்வதற்கான வாய்ப்பு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். முடிந்தவரை உங்கள் நினைப்பு பலிக்கும். |
தனுசு | உங்கள் ராசிக்கு அபரிமிதமான வளர்ச்சியை சுக்கிரனால் கிடைக்கப்போகின்றது. இந்த ராஜயோகம் உங்களின் வருமானம் மற்றும் லாப வீட்டில் உருவாகிறது. இந்த காரணத்தினால் உங்கள் வருமானம் பல மடங்கு அதிகரிக்கலாம். உங்களுககு திடீரென்று பண ஆதாயம் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு, பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் நினைத்த இலக்கை அடைய சுக்கிரன் உதவியாக இருப்பார். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
