தாய்மை மீது மட்டுமே விருப்பம் ... திருமணம் குறித்து ஸ்ருதி ஹாசன் ஓபன் டாக்!
நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்திய பேட்டியொன்றில் திருமணம், துணை மற்றும் தத்தெடுப்பின் மூலம் தாய்மையடையும் விருப்பம் ஆகியவை உள்ளிட்ட பல தனிப்பட்ட விருப்பங்கள் குறித்த தனது எண்ணங்களைப் வெளிப்படையாக பகிர்ந்துக்கொண்டார். குறித்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை ஸ்ருதிஹாசன்
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் கால்பதித்தவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன்.

இவர் தமிழ், தெலுங்கு படங்களில் பிரபல பாடகியாகவும் முன்னணி நடிகையாகவும் வலம் வருகின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.
மேலும் இவர் சோலோ பாடல்கள் மூலம் தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி வைத்திருக்கின்றார்.இவரின் குரலுக்கு மயங்காதவர்களே இருக்க முடியாது என்றால் மிகையாகாது.

தமிழ் மற்றும் இந்தி மொழியில் வெளியான ‘ஹேராம்’ படத்தில், குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், தனது திறமையாலும் யதார்த்தமாக நடிப்பாலும், தற்போது சினிமா துறையில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறியிருக்கின்றார்.
சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த ‘ஏழாம் அறிவு’ படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.

அதனை தொடர்ந்து தனுஷ் நடிபில் வெளியான 3, தளபதிக்கு ஜோடியாக புலி, தல அஜித்துடன் வேதாளம், சூர்யாவுடன் சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
அதனை தொடர்ந்து ஸ்ருதிஹாசன் மற்றும் இயக்குநர் லோகேஷ் நடிப்பில் வெளியான 'இனிமேல்' என்ற பாடல் பெரிய அளவில் வைரல் ஆனது.

அதனை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘தக் லைஃப்’ திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இவர் பாடிய விண்வெளி நாயகா பாடல் பெரிய ஹிட் கொடுத்தது.
காதல் வாழ்க்கை
நடிகை ஸ்ருதி ஹாசன் எப்போதும் வெளிப்படையாக பல விஷயங்களை பேசக்கூடியவர். அவர் இதற்கு முன் காதலில் இருந்ததையும் வெளிப்படையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்.
அதில் ஒருமுறை திருமணம் செய்யும் அளவுக்கு கூட அவர் சென்று இருக்கிறார். ஆனால் சில காரணங்களால் காதல் பிரேக்கப்பில் முடிந்தது. 40 வயதாகும் ஸ்ருதி தற்போது சிங்கிளாக தான் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் திருமணம் பற்றி பேசிய அவர், ஒரு துணையுடன் வாழ்வது முக்கியம் என்றாலும் அதற்கு திருமணம் தேவையில்லை.
தாய்மை மீது ஆர்வம் இருப்பதால், எதிர்காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வது அல்லது தத்தெடுப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என ஸ்ருதி வெளிப்படையாக கூறியுள்ளார் குறித்த விடயம் தற்போது இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |