முகம், கண் வீங்கிய நிலையில்.. ஸ்ருதிஹாசனுக்கு வந்த நோய்! புகைப்படத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்
நடிகை ஸ்ருதிஹாசன் முகம் வீங்கி வெளியிட்ட புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
நடிகை ஸ்ருதிஹாசன்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், தெலுங்கு படங்களிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.
இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போதும் மேக்கப் இல்லாத புகைப்படத்தினை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு என்ன ஆச்சு என்று கேள்வி எழுப்பும் வகையில் குறித்த புகைப்படம் இருக்கின்றது.
முகம் வீங்கி, கண்களில் நீர் வழிந்து ஸ்ருதி வெளியிட்ட புகைப்படத்தினை வெளியிட்டு அவர் கூறியிருப்பது, “சரியான செல்ஃபிகள் மற்றும் போஸ்ட்டுகள் நிறைந்த உலகில் - போஸ்ட்டுக்கு வராதவை இதோ.... மோசமான முடி நாள்... காய்ச்சல் மற்றும் சைனஸ் பிரச்னையால் முகம் வீங்கிய நாள்... மீதமுள்ளவை மாதவிடாய் க்ராம்ப் நாள்.... இவைகளையும் நீங்கள் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.