லிவ்விங் டுகெதரில் இருக்கும் ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ஆண் நண்பருடன் தனியாக வாழ்ந்து வரும் ஸ்ருதிஹாசனின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
ஸ்ருதிஹாசன்
நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தன் தந்தையை போலவே சினிமாவில் நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவராக விளங்கி வருகிறார்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என பல டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டார்.
இருப்பினும் தற்போது தமிழில் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லாததால் பாலிவுட் மற்றும் டோலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.
இவர் நடிப்பில் “ வீரசிம்ஹா ரெட்டி” என்கிற திரைப்படத்தில் பால கிருஷ்ணாவுக்கு ஜோடியாகவும், வால்டர் வீரய்யா திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார்.
சொத்து மதிப்பு
திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதி - ஷாந்தனு ஹசாரிகா என்கிற டூடுல் கலைஞரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் தற்போது லிவ்விங் டுகெதராக வாழ்ந்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் இவர்கள் எடுத்து கொண்ட புகைப்படங்களும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும். திரைப்படங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதி ஒரு திரைப்படத்திற்கு 6 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவாராம்.
அத்துடன் ஸ்ருதியிடம் 47 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஸ்ருதி ஒரு ரிச் பேர்ஸன் எனவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த செய்தி வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
You May Like This Video
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |