நான் பண்ணா மட்டும் தப்பா? ஏன் இப்படி நினைக்கிறீங்க- ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
வயதான நடிகர்களுடன் நடித்தால் தப்பா என்று நடிகை ஸ்ருதிஹாசன் ஓபனாக பேசியுள்ளார்.
நடிகை ஸ்ருதிஹாசன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இவர் உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளாவார்.
இவர் நடிகை, இசையமைப்பாளர், பாடகி என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். 1992ம் ஆண்டு வெளியான ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெற்ற ‘போற்றிப் பாடடி பெண்ணே’ என்ற பாடலை ஸ்ருதிஹாசன் தன் 6 வயதில் முதன் முதலாக சினிமாவில் பாடினார்.
தமிழ் சினிமாவில் 7ம் அறிவு படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். 2009-ம் ஆண்டு வெளியான ‘உன்னைப்போல் ஒருவன்’ என்ற படத்திற்கு முதல்முறையாக ஸ்ருதிஹாசன் இசையமைத்தார்.
விஜய், அஜித், விஷால் உட்பட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ஸ்ருதிஹாசன் காதலன்?
ஸ்ருதிஹாசன், தற்போது புகைப்பட கலைஞர் சாந்தனு என்பவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
இவர்கள் இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் பெங்களூரில் வாழ்ந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
அவ்வப்போது இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ருதிஹாசன் ஓபன் டாக்
இந்நிலையில், ஸ்ருதிஹாசன் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில்,
அவரிடம் மிகவும் வயதான நடிகர்களுடன் தொடர்ந்து கதாநாயகியாக நடித்து வருகிறீர்களே என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்து பேசிய ஸ்ருதிஹாசன், முதல் விஷயம் தெலுங்கு சினிமா ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறார்கள்.
அனைத்து சினிமாக்களிலுமே வயதான நடிகர்களுடன், இளைய நடிகைகள் ஜோடியாக நடித்து வருகிறார்கள். பாலிவுட்டில் கூட அப்படி நடித்து வருகிறாக்ரள்.
ஷாருக்கான், சல்மான்கான் போன்ற நடிகர்களுடன் இளைய நடிகைகள் நடிக்கிறார்கள். அப்படியிருக்குக்கும்போது ஏன் நான் மட்டும் ஒரு வயதான நடிகருடன் நடித்தால் எப்படி தப்பாகும் என்றார்.
இவ்வருடம் பொங்கலுக்கு தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளியான வீர சிம்ஹா ரெட்டி மற்றும் சிரஞ்சீவி நடித்து வெளியான வால்ட்டர் வீரய்யா 2 திரைப்படங்களிலுமே ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.