சிவாஜிக்குப் பிறகு ரஜினியுடன் ஸ்ரேயா... தர்மன் படத்தில் நடிக்கிறாரா?
நடிகை ஸ்ரேயா, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அந்தப் புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
குறிப்பாக, அவர் ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தர்மன் திரைப்படம்
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தர்மன்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல் ஹாசன் – ரஜினிகாந்த் கூட்டணியில் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுவதால், படம் குறித்த எதிர்பார்ப்பு ஏற்கனவே உச்சத்தில் உள்ளது.

இப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகைகள் சிம்ரன் மற்றும் ராஷி கண்ணா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான ராம் பொத்தினேனி இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
ரஜினியுடன் ஸ்ரேயா வெளியிட்ட செல்ஃபி
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ரேயா. குறிப்பாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து சிவாஜி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர்.
இந்த நிலையில், ரஜினிகாந்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்களில் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுவதுடன், அவை சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளன.

புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகத் தொடங்கியதும், ரசிகர்கள் மத்தியில், ஸ்ரேயா தர்மன் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கிறாரா? அல்லது படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சந்தித்தபோது இந்தப் புகைப்படங்களை எடுத்துக்கொண்டாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் ஸ்ரேயா படத்தில் நடிக்கிறாரா என்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9 Evening