பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு எக்ஸ் தளத்தில் நடந்த அத்துமீறல்- ரசிகர்களுக்காக வெளியிட்ட பதிவு
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு எக்ஸ் தளத்தில் நடந்த அத்துமீறல் தொடர்பாக வெளியான செய்தி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
ஸ்ரேயா கோஷல்
இந்தியாவில் புகழ்பெற்ற பாடகிகளில் ஒருவர் தான் ஸ்ரேயா கோஷல்.
இவர், இந்தி மொழியை தாய் மொழியாக கொண்டவர். இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
மறைந்த பாடகர் பாலசுப்ரமணியத்திற்கு பிடித்த பாடகர்களில் ஸ்ரேயா கோஷலும் ஒருவர், தமிழில் டி.இமான் இசையில் அதிக பாடல்களை பாடி ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளார்.
ரசிகர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
இவ்வளவு பிரபலமாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் தனது எக்ஸ் பக்கம் முடக்கப்பட்டிருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.
அதாவது, “ ரசிகர்கள் மற்றும் நண்பர்களுக்கு, என்னுடைய எக்ஸ் பக்கம் கடந்த 13-ஆம் தேதி முதல் முடக்கப்பட்டு உள்ளது. அதனை சரி செய்ய எக்ஸ் குழுவினரை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால், தானியங்கி முறையில் வரும் பதில்களை தவிர எந்த ஓர் உதவியும் எனக்கு கிடைக்கப் பெறவில்லை.
எனது கணக்கை டெலிட் செய்யவோ, உள்ளே நுழையவோ முடியவில்லை. இதனால் தயவு செய்து, எனது எக்ஸ் பக்கத்தில் இருந்து வரும் எந்த லிங்கையும் க்ளிக் செய்ய வேண்டாம். அத்துடன், அந்தப் பக்கத்தில் வரக் கூடிய எந்த தகவலையும் நம்ப வேண்டாம்.
அவ்வாறு வருபவை அனைத்தும் போலி மற்றும் மோசடி செய்திகளாக இருக்கலாம். கணக்கு மீட்கப்பட்ட பிறகு, உடனடியாக வீடியோ மூலம் தகவல் தெரிவிக்கிறேன்” என ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த செய்தி ரசிகர்களின் கவனத்திற்கு சென்றுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |