இந்த சின்ன பொண்ணு யார் தெரியுமா? நெஞ்சங்களை வருடிய மெல்லிசை சொந்தக்காரியின் வைரல் புகைப்படம்
வழக்கமாகவே ஒரு சில பிரபலங்களில் புகைப்படங்களாது வெளியாகி இணையத்தில் வைரலாகி வரும்.
அந்தவகையில் ஒரு சிறுமியின் புகைப்படமானது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் புகைப்படம்
பிரபல நடிகர் மற்றும் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி குறிப்பிட்ட காலத்திற்கு பேச்சுப்பொருளாக இருக்கும்.
அந்தவகையில் பிரபல முன்னணி பாடகியின் குழந்தை பருவ புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அது யார் என்று கண்டுக்கொள்ள முடியாமல் பலரும் குழம்பி போய் உள்ளார்கள்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் இந்திய சினிமாவில் முன்னணி பாடகியாக உள்ளார். "முன்பே வா" பாடலுக்கு சொந்தக்காரியான ஷ்ரேயா கோஷல் தான் இந்த சிறுமி.
ஷ்ரேயா கோஷல்
2002 ஆம் ஆண்டு பாலிவுட்டில் சஞ்சய் லீலா பன்சாலியின் தேவ்தாஸ் படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமாகினார்.
தொடர்ந்து கார்த்திக் ராஜா இசையமைப்பில் 'ஆல்பம்' என்ற படத்தில், 'செல்லமே செல்லம் என்றாயடி' பாடல் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.
இதையடுத்து இளையராஜா இசையமைப்பில் வெளியான சொல்ல மறந்த கதை' படத்தில் 'குண்டு மல்லி' பாடலை பாடினார்.
பல மொழிகளில் பல பாடல்களை பாடி இந்தியா மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |