கருப்பு நிற ஆடையில் கணவருடன் இணைந்து கலக்கான ஆட்டம் போட்ட திருமணம் சீரியல் நடிகை!
கருப்பு நிற சட்டையும் வேஷ்டியும் கட்டிக் கொண்டு தன்னுடைய கணவர் சித்துவுடன் ஸ்ரேயா குத்தாட்டம் போடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீரியல் ஜோடிகள்
மக்கள் மத்தியில் மற்றுமொரு காதல் ஜோடிகளாக வலம் வந்து தற்போது தம்பதிகளாக இருப்பவர்கள் தான் ஸ்ரேயா- சித்து.
இவர்கள் “திருமணம்” என்ற சீரியலில் ஜோடியாக நடித்து சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள். இவர்களின் யதார்த்தமான நடிப்பும், ஜோடிகளிடம் இருக்கும் பொருத்துமும் தான் மக்கள் மத்தியில் இவர்களை கொண்டு சேர்த்தது என்றும் சொல்லலாம்.
மேலும் “திருமணம்” சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும், ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தினார்கள். இதனை தொடர்ந்து இவர்களின் “திருமணம்” சீரியல் கொரோனா காலப்பகுதியில் சென்றுக் கொண்டிருந்ததால் விரைவில் முடிக்கப்பட்டது.
இந்த சீரியலின் மூலம் நட்பாக பழகி வந்த இருவரும், காதலிக்க ஆரம்பித்து இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள். இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி கொண்டிருந்தது.
திருமணத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து நடிப்பது போன்று ஒரு கதை வரவில்லை என்பதால் இருவரும் தற்போது தனி தனி ஜோடிகளுடன் இணைந்து நடித்து வருகிறார்கள்.
கணவருடன் குத்தாட்டம் போடும் ஸ்ரேயா
இந்த நிலையில் சித்து - ஸ்ரேயாவும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். மேலும் அவ்வப்போது ரீல்ஸ் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார்கள்.
அதற்கும் மில்லிக்கணக்கான பார்வையாளர்களை வைத்துள்ளார்கள். அந்த வகையில் குத்து பாடலுக்கு வேஷ்டியுடன் ஸ்ரேயாவும் சித்துவும் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார்கள்.
இவர்களின் ஆட்டத்தை பார்த்து நெட்டிசன்கள் “ இருவரும் பக்கா ஜோடி தான் ” வாழ்த்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள்.