இந்த நபர்கள் மட்டும் சிக்கனை தோலுடன் சாப்பிட கூடாது - மீறினால் இந்த ஆபத்து நிச்சயம்
பலருக்கும் கோழிக்கறி மிகவும் விருப்பமான உணவாக இருக்கிறது. குறிப்பாக, சிலர் மொறுமொறுப்பாக இருக்கும் கோழித் தோலை விரும்பி சாப்பிடுகிறார்கள்.
ஆனால், இது ஆரோக்கியத்திற்கு நன்மையா அல்லது தீமையா என்பது பற்றி சரியான புரிதல் இல்லாமல் இருக்கலாம். கோழி தோலில் நிறைவுற்ற கொழுப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
இந்த கொழுப்புகள் இரத்தத்தில் கெட்ட கொழுப்பு (LDL) அளவை அதிகரிக்கச் செய்யக்கூடும். இதனால், இதய நோய், உயர் கொழுப்பு, உடல் எடைக் கூடுதல் போன்ற பிரச்சனைகள் உருவாகலாம். இதன் காரணமாக மிகவும் முக்கியமாக சில நபர்கள் கோழி இறச்சியை சாப்பிட கூடாது.
யாரெல்லாம் கோழிக்கறியை தோலுடன் சாப்பிடக்கூடாது
இதய நோய் உள்ளவர்கள்
கோழித் தோலில் அதிகமான நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் காணப்படுகிறது. இது தமனிகளில் பிளேக் உருவாக வழிவகுக்கிறது. இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற இதய சம்பந்தமான ஆபத்துகள் அதிகரிக்கும். எனவே, இதயநோய் உள்ளவர்கள் மற்றும் குடும்பத்தில் இதயநோய் வரலாறுள்ளவர்கள் கோழித் தோலைத் தவிர்க்க வேண்டும்.
உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள்
உயர் இரத்த அழுத்தம் இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இது மாரடைப்புக்கு முக்கிய காரணியாக அமைகிறது. அதிக கொழுப்பு மற்றும் உப்பு உள்ள உணவுகள் இதில் பாதிப்பை மேலும் அதிகரிக்கின்றன. எனவே, இவ்வாறான நபர்களும் கோழித் தோலை தவிர்ப்பது நல்லது.
எடை குறைக்க விரும்புவோர்
கோழித் தோலில் அதிக கலோரி உள்ளது. உதாரணமாக தோல் இல்லாத சமைத்த கோழி மார்பகம் (1 கப்) – 231 கலோரிகள் தோல் உள்ள கோழி மார்பகம் (1 கப்) – 276 கலோரிகள் எனவே, எடை இழக்க விரும்புவோர், கலோரி கட்டுப்பாட்டுக்காக தோலை தவிர்ப்பது நன்மை தரும்.
காயம் உள்ளவர்கள் சிலர்
காயம் உள்ளபோது கோழித் தோல் அரிப்பையும் வடுக்களையும் அதிகரிக்கும் என நம்புகிறார்கள். இது குறித்து உறுதியான அறிவியல் ஆதாரம் குறைந்திருந்தாலும், காயம் குணமாகும் நிலையில் தோலை தவிர்ப்பது பாதுகாப்பானது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
வறுத்த கோழி – அதிக ஆபத்து
கோழித் தோலை ஆழமாக வறுப்பது, அதிக எண்ணெய் மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை உள்ளடக்கியதாக மாறுகிறது. இது மிகவும் தீங்கான உணவாக இருக்கக்கூடும். வறுத்த கோழி சாப்பிட விரும்புபவர்கள், தோலை அகற்றுவது நல்லது என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
கோழித் தோலை உணவில் சேர்க்கலாமா வேண்டாமா என்பது, உங்கள் உடல்நிலை, நோய் வரலாறு மற்றும் உடல் பருமன் நிலையைப் பொறுத்தது. ஏதேனும் உடல்நலக் கவலைகள் இருந்தால், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனை பெறுவது மிக முக்கியம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
