அடிக்கடி ஏப்பம் வரும் பிரச்சனையா? காரணங்களும், அதற்கான தீர்வும்
அடிக்கடி ஏப்பம் வருவதற்கான காரணத்தையும் அதனை தடுக்கும் வழிமுறைகளையும் தெரிந்து கொள்வோம்.
ஏப்பம் எவ்வாறு வருகின்றது?
நாம் உணவு உட்கொள்ளும் தருணத்தில் உணவுடன் சேர்த்து காற்றையும் விழுங்கிவிடுகின்றோம். இந்த காற்று வயிறையும், தொண்டையும் இணைக்கும் உணவுக்குழாய் பகுதியில் அதிகமாக சேருமாம்.
நாம் வேகமாக சாப்பிடும் போதோ, தண்ணீர் குடிக்கும் போதோ இந்த காற்றானது ஏப்பமாக வெளியேறுகின்றது.
இந்நிகழ்வு இயல்பானது என்றாலும், சிலருக்கு தொடர்ச்சியாக ஏப்பம் வந்து கொண்டே இருக்கும். இதற்கு காரணம் அன்றாட பழக்க வழக்கங்கள் என்று கூறப்படுகின்றது.
காரணம் என்ன?
மது மற்றும் புகை பிடிக்கும் போது அதிகமான வாயு உள்ளிழுக்கப்பட்டு ஏப்பத்தை ஏற்படுத்துமாம்.
இதே போன்று சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்தும்போது, வாயு அதிகமாக உள்ளிழுக்கப்பட்டு ஏப்பம் வரக்கூடும்.
ஏப்பம் வருவதைத் தடுக்க வேண்டும் என்றால் வேகமாக சாப்பிடாமல் மெதுவாக சாப்பிட வேண்டும்.
இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிட நேர்ந்தால் மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், லாக்டோஸ் இல்லாத பால் பொருட்களை முயற்சி செய்யலாம்.
இவ்வாறான சிறிய மாற்றங்களை உங்களது அன்றாட வாழ்க்கையில் முறையில் கொண்டு வந்தால் ஏப்பத்திற்கு சற்று தீர்வு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |