பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்... அப்போ இந்த பதிவு உங்களுக்காகத்தான்
பொதுவாகவே நாம் சாப்பிடுவதற்கும் முன்னரும் சாப்பிட்ட பின்னரும் ஏதாவது பழங்கள் சாப்பிடுவது வழக்கம்.
ஆனால் சில பழங்களை சாப்பிடும் போது சில உணவுகளை சேர்த்து சாப்பிடக் கூடாது என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும் அதில் மிக முக்கியமானது தான் முக்கனிகளில் ஒன்றான பலா பழம். பலாப்பழத்தில் பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகமாக உள்ளது.
அதிலும் வைட்டமின் சி மற்றும் பி வைட்டமின்கள் அதிகம் உள்ள சில பழங்களில் ஒன்றாகும். மேலும், பலாப்பழத்தில் ஃபோலேட், நியாசின், ரிபோஃப்ளேவின், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது.
இவ்வாறு பல நன்மைகளையும் ஊட்டச்சத்துக்களையும் கொண்ட பலாப்பழத்தை சிலவற்றோடு சேர்த்து சாப்பிடக் கூடாது அது என்னென்ன என்பது பற்றி இந்தப் பதிவில் தெரிந்துக் கொள்வோம்.
பலா பழத்துடன் சாப்பிடக் கூடாதவை
பலா பழத்தோடு பப்பாளி பழத்தை சாப்பிடக் கூடாது ஏனெனில் பலாப்பழத்தில் இருக்கும் ஆக்சலேட் என்ற வேதிப்பொருள் பப்பாளியில் இருக்கும் கால்சியம் இரண்டும் இணைந்து எலும்புகளை பலவீனமாக்குவதோடு வயிறு கோளாறுகளையும் ஏற்படுத்தும்.
பலாப்பழம் சாப்பிட்ட பிறகு வெற்றிலை போடக்கூடாது ஏனெனில் பலாப்பழத்துடன் வெற்றிலை போடும் போது வயிற்று வலி ஏற்படும். அதுமட்டுமல்லாது உணவு ஒவ்வாமையும் ஏற்படும்.
பலாப்பழம் சாப்பிட்ட பின் வெண்டைக்காய் சாப்பிட்டால் மோசமான விளைவை ஏற்படுத்தும். இவ்வாறு இரண்டையும் சாப்பிடுவதால் சருமத்தில் எரிச்சல் மற்றும் அரிப்பு என்பனவும் ஏற்படும்.
பலாப்பழம் சாப்பிட்ட பின் பால் குடிக்க கூடாது. அவ்வாறு பால் குடித்தால் சருமத்தில் வெள்ளைப் புள்ளிகள் மற்றும் வயிற்றுப் பிரச்சினைகள் ஏற்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |