இந்த பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்காதீங்க... பாரிய பிரச்சினை ஏற்படும்
ஆரோக்கியத்தை அள்ளித்தரும் பழங்களில் சிலவற்றினை சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்துவது கூடாது. என்னென்ன பழங்கள் என்பதை தெரிந்து கொள்வோம்.
பொதுவாக பழங்கள் என்றாலே ஆரோக்கியத்தை மட்டுமே கொடுக்கும் என்பதை தான் நாம் நினைத்திருப்போம். இவற்றினை சரியான முறையில் சாப்பிட்டால் ஆரோக்கியம் மேம்படும்.
ஆனால் இவற்றினை சாப்பிட்டுவிட்டு நீங்கள் சில தவறுகளை செய்துவிட்டால் அது பிரச்சினையை ஏற்படுத்தும்.
அந்த வகையில் சில பழங்களை சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்தக்கூடாதாம். அது என்னென்ன பழங்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எந்த பழத்தை சாப்பிட்டு நீர் அருந்தக்கூடாது?
நீர்ச்சத்து அதிகமாக கொண்டு தர்பூசணியை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனெனில் இவை செரிமான பிரச்சினையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
அதிக ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட வாழைப்பழத்தினை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் ரத்தத்தின் அழுத்தத்தின் அளவு கூடுமாம்.
இதே போன்று ஆப்பிள் பழத்தினை சாப்பிட்ட உடனே தண்ணீர் பருகினால், செரிமானத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துாம்.
அதிகளவில் சத்துக்களைக் கொண்ட மாதுளையை சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தினால், அமிலத்தன்மை, வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுமாம்.
வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்ட சிட்ரஸ் வகையான பழங்களை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடிக்கக்கூடாது. ஏனெனில் உடலில் பிஹெச் அளவு வெகுவாகக் குறைவதுடன்,செரிமான பிரச்சினையையும் ஏற்படுத்துகின்றது.
இதே போன்று நாவல் பழத்தினை சாப்பிட்ட பின்பு தண்ணீர் குடித்தால் அஜீரணம் மற்றும் வயிற்றுப்போக்கு பிரச்சினைகள் ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |