உங்கள் மொபைல் போன் தண்ணீரில் விழுந்து விட்டதா? பாதிப்பை குறைக்க சில வழிகள்
மொபைல் போன் என்பது இன்று அனைவரின் ஒரு அத்தியாவசியப்பொருளாக மாறி விட்டது.
அந்த வகையில் நமது எந்த வேலைகளாக இருந்தாலும் சரி அனைத்து வேலைகளையும் இலகுவாக மாற்ற மொபைல் போன் தான் இன்றியமையாத பொருளாக இருக்கிறது.
அதிக விலை உயர்ந்த போன்களை தற்காலம் அனைவரும் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு விலையுயர்ந்த மொபைல் போன்கள் தண்ணீரில் விழுந்தால் அதை எப்படி பழைய நிலைமைக்கு மாற்றலாம் என்பதை இந்த பதிவில் பாாக்கலாம்.
பாதுகாக்கும் வழிகள்
நீங்கள் போனை சார்ஜ் இல் போட்டு வைத்திருக்கும் போது அது தவறுதலாக தண்ணீரில் விழுந்தால் அல்லது வேறு பொருளுடன் தொடர்பில் இருந்தால் அதை உடனடியாக டிஸ்கனெக்ட் செய்ய வேண்டும்.
இதன் மூலம் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு குறையும். பின்பு போனை நன்றாக உலரக்கூடிய இடத்தில் உலர விட வேண்டும். உங்கள் கைகளால் போனை கீழ்நோக்கி மெதுவாக தட்டும் போது அதிலுள்ள நீர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்து விடும்.
நல்ல காற்றோட்டம் வரக்கூடிய இடத்தில் வைக்க வேண்டும். இதனால் நீர் ஆவியாகி வெளியே செல்லும். போனை ஒரு நாள் முழுவதும் உலர வைத்தால் அது மீண்டும் பழைய நிலைக்கு வர வாய்ப்பு உள்ளது.
இவை செய்தும் உங்கள் போன் சரிவரவில்லை என்றால் நீங்கள் எந்த நிறுவனத்தின் போனை வாங்கியுள்ளீர்களோ அதே நிறுவனத்திடம் கொடுத்து சர்வீஸ் செய்ய வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |