பைக்கை பாம்பு போல வளைந்து நெழிந்து ஓட்டிய நபர்! இறுதியில் ஏற்பட்ட பரிதாப நிலை.. பக்கத்தில் இருந்தால் ஆபத்து?
தெலங்கானா மாநிலம் சைபராபாத் மாநில காவல்துறையினர் தங்கள் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு நிதானம் இல்லாமல் சாலையில் பைக் ஓட்டும் நபரின் வீடியோ தான் அது.
அவரால் சாலையில் நேராக பைக் ஓட்ட முடியமால் தட்டுதடுமாறி எதிரில் வருபவர்களை திசைமாற வைத்துள்ளார்.
కృష్ణ గారి వీర డ్రైవింగ్ గాథ… మద్యం మత్తులో
— CYBERABAD TRAFFIC POLICE సైబరాబాద్ ట్రాఫిక్ పోలీస్ (@CYBTRAFFIC) July 9, 2021
ఇబ్రహీంపల్లి గేట్, చేవెళ్ల. 04.07.2021#RoadSafety #RoadSafetyCyberabad pic.twitter.com/ZDJvlTjOV2
சைபராபாத் காவல்துறையினர் இந்த வீடியோவை விழிப்புணர்வுக்காக வெளியிட்டுள்ளனர். இதுப்போன்று யாரும் குடித்துவிட்டு பைக் ஓட்ட வேண்டாம் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
போதையில் வண்டி ஓட்டும் அவர் ஹெல்மெட் இருந்தும் அதனை அவரது பைக் கண்ணாடியில் தொங்கவிட்டுள்ளார். அந்த நபர் மீண்டும் பைக்கில் ஏறி சாலையில் பைக்கை அங்கும் இங்குமாக ஓட்டி செல்கிறார்.
இதனால் அந்த சாலையில் ஒரு பிரளயமே உருவாகியது. மதுபோதையில் பைக் ஒட்டியதால் எதிரில் வந்தவர்களுக்கு தான் ஆபத்து அதிகமாக இருந்தது. கடைசியாக அவர் ஒரு கார் மீது மோதி மீண்டும் கீழே விழுகிறார்.