சனிக்கிழமைகளில் சனி பகவான் சம்பந்தப்பட்ட பொருட்களை தானம் செய்ய கூடாத ராசிக்காரர்கள்: உங்கள் ராசியாக கூட இருக்கலாம்!
பொதுவாகவே ஒவ்வொரு கிழமைகளிலும் ஒவ்வொரு பொருட்களை நாம் வாங்குவது சிலருக்கு அதிஷ்டம் கொடுக்கக்கூடியது. அதில் ஏதாவது சில தடைகள் வந்தாலோ அல்லது பிரச்சினைகள் வந்தாலோ அவற்றை துரதிர்ஷ்டமாக பார்ப்பார்கள்.
அவ்வாறு தான் சனி பகவானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை தினத்தில் சில ராசிக்காரர்கள் தான தர்மம் செய்யக் கூடாது என வேத ஜோதிடம் சொல்கிறது. அந்தவகையில் ஒரு மனிதனின் வாழ்க்கையில் சனி பகவானின் பங்கு அதிகம் இருக்கிறது.
இவர் கர்மா மற்றும் நீதியின் கடவுகளாக இருப்பவர். கர்ம பலன்களை அருளும் சனி பகவான், நல்ல செயல் செய்பவர்களுக்கு நல்ல பலனையும், தீய செயல்களை செய்பவர்களுக்கு தீய பலனையும் தருகிறார்.
சனிக்கிழமைகளில் தானம் செய்ய கூடாத ராசிக்காரர்
வேத ஜோதிட சாஸ்த்திரத்தின் படி சனிக்கிழமைகளில் தான தர்மம் செய்யக்கூடாது. அதில் ரிஷபம், கன்னி, துலாம், மகரம் ஆகிய ராசிக்காரர்கள் அன்னதானம் செய்யக்கூடாது.
ஜாதகத்தில் சனியின் நிலை நன்றாக அமைந்திருந்தாலும் இவர்கள் சனிக்கிழமை தானம் செய்வதை தவிர்க்கவும். மேலும், சனிக்கிழமை சனியின் நாள் என்பதால் சனி சம்பந்தமான சில பொருட்களை வாங்கக்கூடாது.
கடுகு, உளுந்து, எண்ணெய், இரும்பு பொருட்கள், உப்பு, கருப்பு நிற செருப்பு எதையும் வாங்க வேண்டாம். இந்த பொருட்களை சனிக்கிழமை தானம் செய்யக்கூடாது.
மேலும், நன்கொடை, தானம் போன்றவற்றை வீட்டிற்கு கொண்டு போகக் கூடாது.