சிங்க் பக்கத்தில் இந்த பொருட்களை வைக்காதீங்க... கிருமி பல மடங்கு பரவும்
கிச்சனின் சிங்கில் அதிகமான ஈரப்பதம் இருக்கிறது அதன் காரணமாக நாம் சில பொருட்களை சிங்க அருகே இருந்து தள்ளி வைக்க வேண்டும்.
சிங்க்
கிச்சனில் நாம் அசைவம் சைவம் என எல்லாவற்றையும் சமைப்போம். இரண்டுக்கும் தனிதனி கிச்சன் சில வீடுகளிலும் இருக்கும். கிச்சன்களில் சிங்க் இருப்பது எல்லோருக்கும் தெரியும்.
சிங்க் இல் நாம் சமைக்கும் பொருட்களை கழுவ பயன்படுத்துவோம். இந்த இடம் எப்போதும் ஈரப்பதமாகவே இருக்கும்.
பொதுவாக ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடத்தில் பக்றீரியாக்கள் அதிகமாக வளர வழி வகுக்கும். இந்த பக்றீரியாக்கள் மற்றைய இடங்களுக்கும் பரவ ரேரிடும். எனவே என்னென்ன பொருட்களை வைக்க கூடாது என்பதை பார்க்கலாம்.

வைக்க கூடாத பொருட்கள்
சிங்க் அருகே ஈரப்பதம் இருப்பதால், கார்ட்போர்டு பெட்டிகளில் உள்ள கிளீனர்களை வைக்கக்கூடாது. நல்ல காற்றோட்டமான, ஈரப்பதம் இல்லாத இடத்தில் கிளீனர்களை வைப்பதே நல்லது.
சிங்க் அருகே பாத்திரங்களை வைத்தால், ஈரப்பதம் தங்கி கிருமிகள், துர்நாற்றம் ஏற்படும். இது தான் பூஞ்சை, கிருமித்தொற்றுக்கு இது வழிவகுக்கும்.

பாத்திரங்களை பாதுகாப்பான தூரத்தில் வைக்கவும். சிங்க் பக்கத்தில் உணவுப் பொருட்களை வைப்பதைத் தவிர்க்கவும்.
ஈரப்பதம் மற்றும் காற்றோட்டமின்மையால் காய்கறிகள், பழங்கள், பேக்கரி பொருட்கள் விரைவில் கெட்டு, பூஞ்சை பாதிப்பு ஏற்படும்.
சிங்க் அருகே மின்சாதனங்களை வைப்பது ஆபத்தை விளைவிக்கும். மின்சாரப்பொருட்களில் தண்ணீர் பட்டால் அது ஒருவேளை மின்தாக்கும் இல்லை எனின் அந்த பொருட் பழுதாகி விடும்.

உதாரணமாக மிக்சி, ஓவன் போன்ற சாதனங்களை வைப்பது தவிர்க்க வேண்டும். இவை பழுதடைந்து, பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும். மரப்பொருட்களை சிங்க் அருகே வைக்க வேண்டாம்.
அவை ஈரப்பதத்தை உறிஞ்சி, விரைவில் சேதமடைந்து பூஞ்சை பாதிப்புக்கு உள்ளாகும். கட்டிங் போர்டு, மரக்கரண்டிக முற்றாக வைப்பதை தவிர்க்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |