மீன் சாப்பிடும் போது மறந்தும்கூட இந்த உணவை சாப்பிடாதீர்கள்! ஆபத்தானது
மீன் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று வாரத்தில் இரண்டு முறையாவது மீன் சாப்பிடுவது நல்லது. அவ்வாறு சாப்பிடும் போது நாம் சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.
மீனில் புரோட்டின், விட்டமின், கல்சியம், பாஸ்பரஸ், இரும்பு, அயோடின், மெக்னீசியம் என பல சத்துக்கள் உள்ளன. மீன் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகளை கொடுத்து ஒமேகா 3 என்ற சத்தையும் கொடுக்கிறது.
மீன் உணவுடன் சாப்பிடக்கூடாது
சில வகை உணவை மீனுடன் சாப்பிடுவதை தவிர்க்கலாம். அப்படிப்பட்ட ஒரு உணவு தான் பாலும் மீனும், இதனை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது ஆபத்தானது என்று சொல்லப்படுகின்றது.
ஆயுர்வேதத்தின் படி மீன் என்பது அசைவ உணவைச் சேர்ந்தது, பாலானது விலங்கிலிருந்து பெறப்படும் பொருளாக இருந்தாலும் அது சைவ உணவு வகையை சார்ந்தது. இந்த இரண்டு உணவையும் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.
மீன் சரியாக சமைக்கப்படாததாக இருந்தாலோ அல்லது உங்களுக்கு லாக்டோஸ் சகிப்புத்தன்மை பிரச்சினை இருந்தால் மட்டுமே இந்த இரண்டு உணவையும் ஒரே நேரத்தில் சாப்பிடக்கூடாது.
மீறி சாப்பிட்டால் அலர்ஜிகள், சரும பிரச்சினைகள், வயிறு கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
மீன் சாப்பிடுவதால் என்ன நன்மைகள்
மீன் உணவு, மூளைக்கு சிறந்த உணவு என கூறப்படுகிறது. மேலும், கண்பார்வை குறைபாடு, தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் மீனை வாரத்திற்கு இருமுறையாவது எடுத்துக்கொள்வது நல்லது.
மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.
நினைவுத்திறன் குறைபாடு, நரம்புத்தளர்ச்சி நோய் போன்ற பல நோய்கள் குணமடையும். மீன் எண்ணெய்யை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
இந்த எண்ணெய் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாகவும் அழகாக பொலிவோடு இருக்கவும் உதவும்.
மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருக்கிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம்.