தமிழர்கள் இந்த ஒரு பொருளை தான் இதயநோய் வராமல் இருக்க சாப்பிட்டார்களாம்!
கைக்குத்தல் அரிசி, வெள்ளை அரிசி மற்றும் கருப்பு அரிசியை பற்றி கூட கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் சிவப்பு கவுனி அரிசியைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா? இது சமீபத்தில் கண்டறியப்பட்டதல்ல. பழங்காலத்தில் இருந்தே இந்த வகையான அரிசி நம் முன்னோர்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
ஆனால் நமக்குத் தான் இந்த அரிசியின் நன்மைகளைப் பற்றி தெரியவில்லை. கைக்குத்தல் அரிசி, வெள்ளை அரிசியைப் போன்றே சிவப்பு கவுனி அரிசியிலும் நம்பமுடியாத பல ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளன. சிவப்பு கவுனி அரிசியை அன்றாடம் சமைத்து சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்பதைக் காண்போம். சிவப்பு கவுனி அரிசி இன்சுலின் அளவை சீராக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்க விருப்பினால் தினடும் உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
இந்த அருசி நுரையீரல் செயல்பாட்டைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஏனெனில் இந்த இதில் மக்னீசியம் அதிகம் உள்ளது. அதோடு இந்த அரிசியை அன்றாடம் சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலில் ஆக்ஸிஜன் சுற்றோட்டம் மேம்பட்டு, ஆஸ்துமா பிரச்சனை தடுக்கப்படும். சிவப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பல்வேறு செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது.
இதில் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளதால், சிவப்பு கவுனி அரிசி உடலில் இருந்து நச்சுக்களை எளிதில் வெளியேற்றும் மற்றும் குடலியக்கமும் சிறப்பாக இருக்கும். மொத்தத்தில், இது ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படக்கூடியது. முழு தானியங்களில் உள்ள சத்துக்கள் இந்த அருசியில் உள்ளதால், இது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களின் அளவைக் குறைக்கும். கொழுப்புக்களைக் குறைக்கவும், இதய நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
எனவே உங்களுக்கு இதய நோய் எதுவும் வராமல் இருக்க வேண்டுமானால், சிவப்பு கவுனி அரிசியை தினமும் சமைத்து சாப்பிடுங்கள்.
உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு சிவப்பு கவுனி அரிசி சிறப்பானது. ஏனெனில் இந்த அரிசியில் மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடும் போது நார்ச்சத்து அதிகம் என்பதால், இது மிகவும் ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது. சிவப்பு கவுனி அரிசியில் உள்ள தவிடு நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். எனவே எடையும் குறையும்.