உடல் பருமனை குறைக்கும் சில குறுக்கு வழிகள் இதோ!
தவறான உணவு பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற சில செயற்பாடுகள் காரணமாக தான் உடல் பருமன் அதிகரிக்கிறது.
இதன் காரணமாக சிலருக்கு தங்களது சொந்த வேலைகளை கூட செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
இன்றைய தினத்தில் மக்களுக்கு உணவில் மூலம் எவ்வாறு உடல் எடையை குறைக்கலாம் என்று பார்க்கலாம்.
உடல் பருமனை குறைக்கும் உணவு வகைகள்
1. உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும் உணவுகளை மாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும்.
2. குழந்தைகளுக்கு கொழுப்பு செல்களின் (Adipose cells)எண்ணிக்கை அதிகரிப்பதால் தான் உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனை கட்டுபடுத்தினாலேயே உடல் பருமன் இலகுவாக குறைந்து விடுகிறது.
3. அதிகம் தேநீர் பருகும் பழக்கம் உள்ளவர்கள் தனியா, சோம்பு, சீரகம், வெந்தயம், பட்டை போன்ற பொருட்களினால் செய்யப்படும் தேநீர்களை பருக வேண்டும். இவ்வாறான தேநீர்கள் இரண்டு வேளை அருந்துவதால் உடல் பருமனை இலகுவாக குறைக்கலாம்.
4. ஆங்கில மருந்து வில்லைகள் எடுப்பவர்கள் அவ்வப்போது தயிர்கள் போன்ற குளிர்ச்சி நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதிக வெப்பமாக இருந்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும்.
5. கொள்ளு சாப்பாட்டில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இதில் கொள்ளு ரசம், கொள்ளுத் துவையல், கொள்ளுச் சாறு ஆகிய உணவுகள் அதிகம் சாப்பிடுங்கள். இவை உடல் பருமனை கட்டுபடுத்தும்.