ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காத அஜித்... 24 ஆண்டுக்கு பின்பு உடைந்த உண்மை
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் 1993 அமராவதி என்னும் படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார்.
அஜித் தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களுடன் பல படங்களில் நடித்து ஹிட் நாயகனாக உருவாகியிருக்கிறார்.
தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்னும் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது வாழ்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் அமர்களம்.
இந்த படத்தின் கதாநாயகியாக ஷாலினி நடித்து இருந்தார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களி்ல் நடித்துள்ளார்.
அஜித் குமார்
சரண் இயக்கிய அமர்களம் படத்திற்கு அஜித் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நடிப்பிற்கு வந்த தொடக்க காலங்களில் காதல் படங்களையே தேர்வு செய்து நடித்து வந்தார். 25வது படமாக அமர்க்களம் அமைந்தது.
இந்த படத்தில் நடித்தபோதுதான் ஷாலினிக்கும் அஜித்துக்கும் இடையே காதல் ஏற்பட்டு பின்னர் திருமணமும் நடந்தது.
பைக் ரேஸில் விபத்துக்குள்ளான அஜித் சினிமாவில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. அந்த சூழலில்தான் நடித்த படம் தான் அமர்களம்.
இந்த படத்திற்காக அவர் வாங்கிய அட்வான்ஸிற்கான செக்கை இன்னும் மாற்றவில்லை என தெரியவந்துள்ளது.
அவர் சம்பளம் வாங்காமலேயே அமர்க்களம் படத்திற்கு நடித்துக் கொடுத்துள்ளார். இந்த தகவலை இயக்குநர் சரண் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |