ஒற்றைப் புகைப்படத்தை வெளியிட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ஷிவானி: காரணம் என்ன?
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி. இவர் பல சீரியல்களில் நடித்து வந்த நிலையில், ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளார்.
இவர் தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களைக் குவித்து வரும் நிலையில், தற்போது உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷிவானி சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதி உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தினை வெளியிட்டு வைரலானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே 2 மில்லியன் ரசிகர்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொண்டிருந்த நடிகை ஷிவானி, பின்பு ஏகப்பட்ட கவர்ச்சி புகைப்படத்தினை பதிவிட்டு, 3 மில்லியன் ஃபாலோயர்களை தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்தில் இணைத்துள்ளார். அதன் காரணமாகவே தற்போது ஷிவானி நாராயணனின் ஹாஷ்டேக் டிவிட்டர் டிரெண்டிங்கில் உள்ளது.