திருமணத்துக்கு தயாரான பிக்பாஸ் ஷெரின்! வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்
அழகிய அசுரா அழகிய அசுரா பாடலைக் கேட்டாலே யாராக இருந்தாலும் நடிகை ஷெரினை ஞாபகம் வந்துவிடும்.
இவர் துள்ளுவதோ இளமை, விசில், உற்சாகம், நண்பேன்டா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.
image - India Today
அண்மையில் ரசிகர்களிடம் உரையாடியபோது, உங்களுக்கு திருமணம் எப்போது? என்று கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர் இன்னும் ஒரு மாதத்தில் நடக்கும் என்று கூறியுள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பரவியது. இதிலிருந்து ஷெரினுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்ப்பட்டு வந்த நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஷெரின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
image - Times of india
அதில் “எப்போது திருமணம் என்று கேட்டபோது இன்னும் ஒரு மாதத்தில் என்று நகைச்சுவையாக கூறினேன். அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. உண்மையில் எனக்கு ஒரு மாதத்தில் திருமணம் இல்லை என்பதை கூறிக்கொள்கின்றேன்” என்றார்.