உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்ற சொன்ன சுறா! 4 மில்லியன் பேரை கண்ணீர் சிந்த வைத்த காட்சி
ராட்சத சுறா ஒன்று உயிருக்கு போராடிய ஆமையை மனிதர்களிடம் கொண்டு வந்த காட்சி 4 மில்லியன் பேரை கண்கலங்க வைத்துள்ளது.
கடலில் ஆமை ஒன்றினை ராட்சத சுறா ஒன்று வாயில் கவ்விக்கொண்டு வந்துள்ளது. இதனை படகில் சென்ற பயணிகள் காணொளி எடுத்துள்ளதையடுத்து, பயணிகளைப் பார்த்த சுறா குறித்த ஆமையை மனிதர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளது.
ஆமையை தூக்கி பார்த்த நபர்கள் அதன் கழுத்தில் கயிறு ஒன்று சிக்கிக்கொண்டு சுவாசிக்கமுடியாமல் உயிருக்கு போராடியதை அறிந்துள்ளனர்.
உடனே சாதூர்யமாக செயல்பட்டு கழுத்தில் சிக்கிய கயிற்றினை எடுத்துவிட்டதுடன் அதற்கு முதலுதவி செய்து உயிரைக் காப்பாற்றி கடலில் விட்டுள்ளனர்.
இந்த நெகிழ்ச்சியான காட்சியினை 4 மில்லியன் பேர் அவதானித்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
This is incredible! A heartwarming moment captured at sea as a shark asks for human help to rescue a defenseless turtle??
— Tansu YEĞEN (@TansuYegen) May 29, 2023
pic.twitter.com/iOdP5XJr4q