ரியாஸ் கான் தாத்தாவாக போறாரா? குட் நியூஸ் சொன்ன பிக் பாஸ் ஷாரிக்... குவியும் வாழ்த்துக்கள்
பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹாசன் மனைவி மரியா கர்பமாக இருக்கும் செய்தியை ஷாரிக் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அழகிய காணொளியுடன் அறிவித்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
ஷாரிக்
பிரபல வில்லன் நடிகர் ரியாஸ் கான் மற்றும் உமா ரியாஸ் கானின் மூத்த மகனான ஷாரிக் ஹாசன் மரியா என்பவரை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மக்கள் மத்தியில் பிரபல்யமான நடிகர் ஷாரிக் ஹாசன் தற்போது திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார்.
ஷாரிக் கடந்த ஆண்டு மரியா ஜெரிப்ஃபர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது.
மரியா ஜெரிப்ஃபர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அவருக்கு 8 வயதில் ஒரு பெண்குழந்தையும் இருக்கின்றார் என்ற விடயம் இவர்களின் திருமணத்தின் பின்னர் இணையத்தில் வைரலானது.
இந்நிலையில், தற்போது ஷாரிக், தனது மனைவி ஜெனிஃபர் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவுடன் அறிவித்துள்ளார். குறித்த பதிவுக்கு ரசிகர்கள் லைக்குகளையும் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |