பாக்கியராஜ் மறைவு... தனது ஆயுளில் 10 ஆண்டுகளை கொடுக்க ஆசைப்பட்ட சாந்தனு! கலங்க வைக்கும் காணொளி
நடிகர் சாந்தனு தனது தந்தை குறித்து பேசிய காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
பாக்கியராஜ் மறைவு
பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்கியராஜ் சமீபத்தில் மாரடைப்பு காரணமாக மரணமடைந்த நிலையில், ரசிகர்கள், பிரபலங்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அரசு மரியாதையுடன் நேற்று பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில், இவரது துக்கம் தற்போதும் நீடித்து வருகின்றது.
நடிகர் பாக்கியராஜ் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த போது விழா ஒன்றினை நடத்தி அவரை சிறப்பித்தனர்.

அப்பொழுது அவரது மகனும், நடிகருமான சாந்தனு தந்தையின் மீதான அன்பை வெளியிட்டுள்ளார். குறித்த நிகழ்ச்சியில் பேசிய இந்த காட்சியினை முடிந்தால் மட்டும் என்று தலைப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
அக்காட்சியில் என்னால் முடிந்தால் எனது வாழ்க்கையின் 10 ஆண்டுகளை எடுத்து எனது அப்பாவிற்கு கொடுக்கனும்னு நினைக்கிறேன்... அப்போது தான், இன்னும் ஒரு பத்தாண்டுக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ, அவர் ரசிகர்களுக்கு பல திரைப்படங்களையும், கதைகளையும் வழங்க முடியும். ஒரு ரசிகனாகவும், கற்றுக்கொள்பவனாகவும் நான் அவற்றை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன் என்று அந்த காட்சியில் கூறியிருந்தார்.
சாந்தனு பகிர்ந்த இந்த காட்சியினை அவதானித்த நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டும், ஆறுதல் கூறியும் வருகின்றனர்..
காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |