சனியின் ரேவதி நட்சத்திர பெயர்ச்சி! எச்சரிக்கையில் இந்த ராசிகள் கவனம்
மே 17ஆம் தேதி சனி பகவான் ரேவதி நட்சத்திரத்துக்கு பெயர்ச்சி அடைகிறார். இது சில ராசிகளுககு எச்சரிக்கை காலம்.

சனி பெயர்ச்சி
வேத சாஸ்திரத்தில் சனி பகவானின் சின்ன அசைவும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. அந்த வகையில், மே 17ஆம் தேதி சனி பகவான் உத்திரட்டாதி நட்சத்திரத்திலிருந்து ரேவதி நட்சத்திரத்துக்கு நுழைகிறார்.
ஏற்கனவே சனி மீன ராசியில் பயணம் செய்வதால், இந்த மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும்.
குறிப்பாக மூன்று ராசிகள் வாழ்க்கையில் இது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை குறிக்கும்.

மேஷம்
- மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் மனஅழுத்தத்தையும் வேலைப்பளுவையும் அதிகரிக்கும். ஏற்கனவே ஏழரை சனி தாக்கம் இருப்பதால் வேலை மற்றும் வியாபாரத்தில் போட்டி அதிகரிக்கும். குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேசுவதில் கவனம் தேவை. உடல்நலத்திலும் சிறிய பாதிப்புகள் காரணமாக அலட்சியம் தவிர்க்க வேண்டும்.
கடகம்
- கடக ராசிக்காரர்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். மனஅமைதி குறைவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் உடல்நிலை மோசமாகலாம். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் கருத்து முரண்பாடு வரும். பேசுவதில் நிதானம் தேவை. சிலருக்கு வேலை மாற்றம் பற்றிய யோசனைகள் வரும். உணர்ச்சிவசப்டுவதை தவிர்க்க வேண்டும்.
கும்பம்
- கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களுக்கும் இந்த சனி மாற்றம் சோதனைகள் தரும். கும்ப ராசிக்காரர்களுக்கு பணவரவு மற்றும் தொழிலில் ஏற்றத்தாழ்வுகள் வரும். பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில் சிறிய விஷயங்களே பெரிய மனவருத்தமாக மாற வாய்ப்பு உள்ளது. அலுவலக அரசியலில் இருந்து விலகி இருப்பது நல்லது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).