நுரையீரல் ஆரோக்கியம் இருக்க வேண்டுமா? முக்கியமா இந்த உணவுகளை எடுத்துக்கோங்க
மனிதர்கள் சுவாசிப்பதற்கு முக்கியமாக இருக்கும் உடல் உறுப்பான நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
நுரையீரல் பிரச்சினை
இன்றைய காலத்தில் நுரையீரல் பிரச்சினை என்பது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஏற்படுகின்றது.
காற்று மாசுபாடு மற்றும் புகைப்பிடிக்கும் பழக்கம் காரணமாக ஆஸ்துமா மற்றும் சுவாச கோளாறு அதிகரிக்கின்றது.
சுவாசத்தின் ஆதாரமாக இருக்கும் நுரையீரல் ஆரோக்கியமாக இருப்பதற்கு ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பிளவனாய்டு மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகள் தேவைப்படுகின்றது.
ஆதலால் எந்தெந்த உணவுகள் நுரையீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

நுரையீரல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள்
வைட்டமின் சி,ஈ,கே மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ள கீரையினை நாம் எடுத்துக் கொண்டால், உடலிலுள்ள நச்சுக்கள் நீங்குவதுடன், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்கின்றது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள பெர்ரி பழங்கள் ப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுவதால் நுரையீரல் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கின்றது.

குர்குமின் நிறைந்த மஞ்சளில் வீக்கத்தை போக்குவதுடன், ஆண்டி ஆக்சிடென்ட் பண்பும் இதில் இருப்பதால் நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது.

பாதாம், வால்நட், ஆளி விதைகள், சூரியகாந்தி விதைகள் இவற்றில் கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளதால், நுரையீரலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.
வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், நுரையீரலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினைக் குறைக்க உதவுகின்றது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள கிரீன் டீ-வை பருகினால், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தினைக் குறைப்பதுடன், வீக்கத்தையும் தடுத்து நுரையீரலைப் பாதுகாக்கின்றது.
மருத்துவ குணங்களைக் கொண்ட இஞ்சியில் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆன்டிஆக்ஜிடன்ட் பண்பும் உள்ளதால் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |