ஷாலு ஷம்முவுக்கு அடிச்ச லக்.. அடேங்கப்பா ஜாகுவார் காரா? அதன் விலை எவ்வளவு தெரியுமா?
தமிழ் நடிகையான ஷாலு ஷம்மு ஜாகுவார் சொகுசு கார் வாங்கியுள்ளதாக ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சினிமா வாய்ப்பு
தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபல்யமாகியவர் தான் ஷாலு ஷம்மு.
இதனை தொடர்ந்து மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து, டிஎஸ்பி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்களில் இவருக்கென ஒரு தனி இடம் கிடைக்காமல் இருந்தால் காலப்போக்கில் ஷம்முவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் பட வாய்ப்பு இல்லாவிட்டால் நமக்கும் சமூக வலைத்தளங்கள் இருக்கின்றது என அதில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் ரீல்ஸ்கள், கவர்ச்சி புகைப்படங்கள் என பதிவிடும் ஷம்மு சமீபத்தில் பார்டியில் நெருக்கமாக இருந்தது தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் பல வதந்திகள் கிளம்பியது.
ரீல்ஸ் குயினுக்கு இவ்வளவு பெறுமதியான காரா?
இதனை தொடர்ந்து இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாகவும் ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலானது.
ஆனால் அதனை பொய் என்று மறுத்து விட்டார். ஷாலு ஷம்முவிற்கு நீண்ட காலமாக ஒரு கார் வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதன்படி ரூ.1 கோடி ரூபாய் பெறுமதியான ஜாகுவார் காரை வாங்கியுள்ளார்.
இதனை நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இதற்கு எப்படி பணம் வந்தது என ரசிகர்கள் கமண்ட்டு குவித்து வருகிறார்கள்.
நடிகை ஷாலு ஷம்மு “ஸ்கின் கேர்” கிளீனிக்கை நடத்தி வருகிறார். இதில் வந்த பணத்தில் தான் இவர் காரை பாதி பணம் கொடுத்து வாங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.