தனது மகளுக்கு திடீரென ஷகீலா கொடுத்த சர்ஃப்ரைஸ் கிப்ட்! என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
கவர்ச்சியால் ரசிர்களை கவர்ந்தவர் தான் நடிகை ஷகீலா. இவரைப்பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது.
அண்மையில், நிறைவடைந்த குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு, இரண்டாவது பரிசையும் பெற்றார்.
இந்நிகழ்ச்சியின், மூலம் ஷகீலா மீது ரசிகர்களுக்கு மரியாதையே ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நடிகை ஷகீலா திருநங்கை வளர்ப்பு மகளாக மிலா என்பவரை வளர்த்து வருகிறார்.
இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிற்கும் ஷகீலா அழைத்து வந்தார். மிலா, ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இதனிடையே, இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மிலா அண்மையில் 100k பாலோவர்களை பெற்றுள்ளார்.
அதற்காக நடிகை ஷகிலா தனது மகள் மிலாவிற்கு சர்ப்ரைஸாக ஐ பார்ட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.